BREAKING பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மரணம்..; சிம்பு – கார்த்தியுடன் நடித்தவர்
BREAKING பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மரணம்..; சிம்பு – கார்த்தியுடன் நடித்தவர்.
இயக்குனர் இமயம் என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா.. இவர் தற்போது நிறைய படங்களில் நடித்தும் வருகிறார்.
இவரது மகன் நடிகர் மனோஜ்.. இவர் பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.. இந்த படத்தின் விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்… ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.
முதலில் மனோஜ் பாரதிராஜா என்று அழைக்கப்பட்ட இவர் திடீரென பெயரை மனோஜ் கே பாரதி என்று மாற்றினார்.
அதன் பின்னும் பல படங்களில் எடுத்து வந்தார்.. இவர் சிம்புவுடன் ஈஸ்வரன் மற்றும் மாநாடு உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் சரத்குமார் மற்றும் முரளி ஆகியோருக்கு தம்பியாக சமுத்திரம் என்ற படத்திலும் கார்த்தி உடன் விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் இன்று மார்ச் 25ஆம் தேதி மாலை 6:30 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட உயிரிழந்தார்.
தற்போது இவருக்கு 48 வயதாகிறது..

இவர் நடிகை நந்தனாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் பாரதிராஜாவை ஒரு படத்தில் நடிகராகவும் வைத்து ‘மார்கழி திங்கள்’ என்ற பெயரிடப்பட்ட படத்தை இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் இளவயது மரணம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது..
சென்னை சேத்துப்பட்டு உள்ள லேடி ஆண்டாள் பள்ளி எதிரே இவர் வீடு அமைந்துள்ளது..
Manoj Bharathiraja
A4, Alsa Court South India Harrington rd Chetpet
CHENNAI 600031
Tamil Nadu
இவருக்கு நடிகை நந்தனா என்ற மனைவியும் ஹர்ஷித்தா மற்றும் மதிவதனி என்ற இரு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
கூடுதல் தகவல்.. :
இன்று அதிகாலையில் பிரபல நடிகரும் கராத்தே மாஸ்டருமான ஷிஹான் ஹூசைனி என்பவரும் மரணம் அடைந்தார்.. கே. பாலசந்தரின் இயக்கத்தில் 1986ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘புன்னகை மன்னன்’ படத்தில் நடிகராக அறிமுகமானார் ஷிஹான் ஹூசைனி..

விஜயுடன் பத்ரி படத்திலும் விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தில் இவர் நடித்துள்ளார்… புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
ஒரே நாளில் இரண்டு திரை பிரபலங்கள் மரணம் அடைந்துள்ளனர் என்பது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..
Actor Director Manoj Bharathiraja passed away

