தென் தமிழகம் வணங்கும் கடவுள்.: ‘மாடன்’ படத்தை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ்
தென் தமிழகம் வணங்கும் கடவுள்.: ‘மாடன்’ படத்தை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ்
தேவா புரொடக்ஷன்ஸ் சார்பில் கேப்டன். சிவபிரகாசம் உதயசூரியன் தயாரிப்பில் உருவான படம் “மாடன் கொடை விழா”.
தென் தமிழகத்தில் அதிகமாக வணங்கக்கூடிய சுடலைமாடன் சுவாமி குறித்த படம் இதுவாகும்.
இப்படத்தில், கோகுல் கெளதம், ஷாருமீஷா, சூரிய நாராயணன், சூப்பர் குட் சுப்ரமணி, ஸ்ரீ ப்ரியா, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆர் தங்கபாண்டி படத்தினை இயக்கியிருக்கிறார். சின்ராஜ் ஒளிப்பதிவில் விபின் “மாடன்” படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
தமிழகத்தின் தென்பகுதிகளில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கி உள்ளனர்..
இப்படத்தினை தமிழகமெங்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என் ராதா & இராம நாராயணன் வெளியிடுகின்றனர்.
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.., ‘மாடன் கொடை விழா’ திரைபப்படம் வருகிற மார்ச் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Maadan Kodai Vizha release date 14 March 2025

