Gentlewoman விமர்சனம்.. 4.5/5.. Gentle Warning for Men

Gentlewoman விமர்சனம்.. 4.5/5.. Gentle Warning for Men
ஸ்டோரி….
லிஜோ மோல் & ஹரி இருவரும் மனைவி கணவன்.. திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் கணவன் மீது அதீத அன்பை வைத்திருக்கிறார்.. அப்போது லிஜோ-வின் தங்கை தாரணி ஒரு இன்டர்வியூருக்காக இவர்கள் வீட்டுக்கு வருகிறார். மனைவி இல்லாத நேரத்தில் அவளிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார் ஹரி..
இந்த சூழ்நிலையில் தாரணி தட்டி விட தலையில் அடிபட்டு மயங்கி விழுந்து விடுகிறார் ஹரி.. அப்போது கோயிலுக்கு சென்ற லிஜோ வீட்டிற்கு வந்த பின் நடந்த சம்பவங்களை பார்த்து விடுகிறார்..
அந்த சமயத்தில் ஹரிக்கு ஒரு போன் கால் வருகிறது.. அதில் ஹரியின் கள்ளக்காதலி லாஸ்லியா பேசுவதை கேட்டு விடுகிறார் லிஜோ.. அடுத்த நொடி திடீரென மயக்க நிலையில் இருந்து நினைவுக்கு ஹரி திரும்ப திடீரென அவரை வெட்டி கொலை செய்து விடுகிறார் லிஜோ.
அதன் பிறகு என்ன நடந்தது.? குற்றவாளி அக்காவை போலீசில் பிடித்து கொடுத்தாரா.? அக்கா தங்கை இருவரும் என்ன செய்தனர்.? போலீஸ் விசாரணை எப்படி நடந்தது.? லாஸ்லியா என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
Lijomol Jose – Poorni
Hari Krishnan – Aravind
Losliya Mariyanesan – Ana
Rajiv Gandhi – Poovendhan
Dharani – Deepika
Vairabalan – Soviet
Sudesh – Prabhu Doss
‘ஜென்டில் உமன்’ இந்த தலைப்புக்கு 100% பொருத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார் லிஜோமோல்.. ‘ஜெய் பீம் & காதல் என்பது பொதுவுடமை’ உள்ளிட்ட படங்களில் கதையை தாங்கிய லிஜோ இதிலும் தனது கேரக்டரை பிரேம் பை பிரேம் ஆக பேச வைக்கிறார்..
முன்னாள் (கள்ளக்)காதலியாக இருந்தாலும் அதிக அன்பு வைத்து விட்டு அவதிப்படும் ஒவ்வொரு நிமிடமும் தன் நடிப்பில் கவருகிறார்..
ஒரு பக்கம் மனைவி ஒரு பக்கம் காதலி ஆனாலும் எதுவும் தெரியாமல் நடிக்கும் சராசரி கணவனை போல நடிப்பில் கவர்ந்திருக்கிறார் ஹரி..
பூவேந்தன் கேரட்டில் நடித்த போலீஸ் ராஜீவ் காந்தி அப்பாவித்தனமான நடிப்பில் அசத்தியிருக்கிறார்.. சீரியஸான இந்த படத்திற்கு கலகலப்புக்கு பெரிதும் உதவி இருக்கிறார்.. தங்கையாக நடித்த தாரணி கொஞ்ச நேரம் என்றாலும் நடிப்பிலும் வனப்பிலும் கவருகிறார்..
டெக்னீசியன்ஸ்…
Producer: Komala Hari, Hari Bhaskaran, PN Narenthra Kumar & Leo Logane Nethaji
Co-Producer: Dinesh Kumar T.C
Written & Directed by Joshua Sethuraman
Theatrical Release by :
Uthraa Productions – S Hari Uthraa
Technical Crew:
Music Composer : Govind Vasantha
Cinematographer : Sa.Kathavarayan
Editor : Elayaraja Sekar
Production Designer : A.Amaran
Lyrics & Dialogues : Yugabharathi
படம் தொடங்கிய அரை மணி நேரத்தில் கொலை நடக்க அதற்குப்பின் கதை எப்படி நகரும் என நாம் யோசிக்கையில்.. நாம் யூகிக்க முடியாத அளவிற்கு கதையை நகர்த்தி விறுவிறுப்பாக கொடுத்து கிளைமாக்ஸில் அடடா என நம்மை ஆச்சரியப்பட வைத்துவிட்டார் டைரக்டர் ஜோஸ்வா சேதுராமன்..
கணவன் காணவில்லை என மனைவி புகார் கொடுக்காத நிலையில் காதலி முதல் அனைவரும் கம்பளைண்ட் கொடுக்க அதைப் போலீஸ் விசாரிக்கும் விதம் வேற லெவல்.. ஒளிப்பதிவு செய்து காத்தவராயன்.. காட்சிகள் அனைத்தும் அழகு.. இளையராஜா சேகர் என்பவர் எடிட்டிங் செய்து இருக்கிறார்.. இந்த காட்சிகள் தேவையில்லை என நாம் சொல்ல முடியாத அளவிற்கு காட்சிகள் அழகாக ட்ரிம்மிங் செய்திருக்கிறார்..
திருமணமான பின்னர் வேறொரு பெண் மீது கணவனும் வேறு ஒரு ஆண் மீது மனைவியும் ஆசைப்படுவதும் உறவு கொள்வதும் இப்படியாக இருக்கும் சூழ்நிலையில் அதை ஒவ்வொருவரும் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை எதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜோஸ்வா.. நாம் அப்பாவியாக நினைக்கும் பெண்கள் திடீரென அதிரடி ராணியாக மாறும் சூழ்நிலை வரலாம் என்பது லிஜோமோல் மூலம் ஆண்களுக்கு எச்சரிக்கையாக பதிவு செய்திருக்கிறார் டைரக்டர்..
ஆக இந்த ஜென்டில் உமன்.. Gentle Warning for Men
Gentlewoman movie review