படவா விமர்சனம் 3.5/5… கருவேலம் அழித்து நாட்டை காப்போம்

படவா விமர்சனம் 3.5/5… கருவேலம் அழித்து நாட்டை காப்போம்
ஸ்டோரி…
சிவகங்கை மாவட்டத்தில் மரக்காத்தூர் என்ற பகுதியில் வசிக்கின்றனர் விமல் & சூரி.. இவர்கள் செய்யும் அலப்பறைக்கு அளவே கிடையாது..இதனால் அந்த கிராமத்து மக்கள் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.. இவர்களை ஊரை விட்டு துரத்தினால் மட்டுமே நாம் நிம்மதியாக வாழ முடியும் என்கின்றனர்.. எனவே பணம் வசூலித்து விமலை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அங்கு ஒரு பாரில் வேலை செய்து வருகிறார் விமல்.. ஒரு கட்டத்தில் வேலை இழந்து ஊருக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.. ஆனால் கிராமத்துக்கு செல்லவும் பயப்படுகிறார்.
அப்போது விமலுக்கே தெரியாமல் அவரின் மலேசியா நண்பர் ராமர், சூரிக்கு போன் செய்து உனது நண்பர் விமலுக்கு லாட்டரியில் 10 கோடி பணம் கிடைத்துள்ளது என்று பொய் சொல்லிவிடுகிறார்..
இதனை சூரியும் ஊர் மக்களுக்கு தெரிவிக்கவே விமலை வரவேற்க ஊர் கூடி காத்திருக்கிறது. ஒரு கட்டத்தில் விமலும் வந்து சேர்ந்த பின் என்ன நடந்தது அந்த கிராமத்தில்.? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா மற்றும் தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களிலேயே விமல் மற்றும் சூரி கூட்டணி கொடி கட்டி பறந்தது.. தற்போது இந்த வெற்றி பார்முலா படவா படத்திலும் தொடர்ந்துள்ளது.. இவர்கள் இருவரும் செய்யும் அலப்பறைகள் ரசிக்கப்படும்..
அதுபோல் ஒரு கட்டத்தில் ஊர் பிரசிடெண்ட் ஆன பிறகு விமல் செய்யும் நல்ல காரியங்களும் ரசிக்க வைக்கிறது முக்கியமாக கருவேல மரம் விவசாயம், செங்கல் சூளை உள்ளிட்ட பல கிராமத்து சுவாரசியங்களும் படத்திற்கு பலம்.
தற்போது சூரி நாயகனாக நடித்து வந்தாலும் பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த படவா காமெடி ரசிக்க வைக்கிறது..
செங்கல் சூளை ஓனராக மிரட்டலாக நடிப்பை கொடுத்திருக்கிறார் கேஜிஎப் ராம் இவரது தோற்றமே அப்படிதான்.. கருவேல விதைகளை தூவி விவசாயத்தை அழிக்கும் வில்லனாக வருகிறார் ராம்..
நாயகியாக ஸ்ரீதா நடித்திருக்கிறார்.. நடிப்பிலும் அழகிலும் பெரிய ஸ்கோப் இல்லை..
இவர்களுடன் நமோ நாராயணன் தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் கிராமத்திற்கும் கதைக்கும் வலு சேர்த்துள்ளனர்..
டெக்னீசியன்ஸ்…
ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய இசையமைத்தும் தயாரித்தும் இருக்கிறார் ஜான் பீட்டர்.. இருவரும் தங்கள் பணிகளில் கச்சிதம்..
வினோத் கண்ணா படத்தொகுப்பு செய்ய . சரவண அபிராமன் ஆர்ட் பணிகளை செய்திருக்கிறார்… விவேகா, கபிலன் வைரமுத்து, இளைய கம்பன், சொர்ணலதா, ஜான் பீட்டர் ஆகியோர் படத்தின் பாடல்களை எழுதியுள்ளனர்.. கிராமத்திற்கு ஏற்ற நிகழ்வுகளை கலந்து பாடல் வரிகளை அமைத்திருப்பது சிறப்பு.. முக்கியமாக ‘அச்சம் நாணம்…’ பாடல்.. ‘கொட்டுதே வானம்… பாடல் மற்றும் அரிவாள எடுடா பாடல்கள் தாளம் போட வைக்கிறது..
நல்ல கருத்துக்களையும் சமூகத்திற்கு தேவையான சிந்தனைகளை கூட சொல்ல வேண்டும் என்றால் அதற்கு கமர்சியல் தேவை என்பதை உணர்ந்து நந்தா அதற்கேற்ப காட்சிகளை அமைத்திருப்பது சிறப்பு.. முக்கியமாக கருவேல மரங்களால் விவசாயி(யம் ) அழிகிறது என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.. விவசாயியாக சூப்பர் குட் சுப்ரமணி நல்ல தேர்வு..
விவசாயத்தை நேசிக்கும் விவசாயிகளே ஒரு கட்டத்தில் அதனை விட்டு நகரத்திற்கு செல்கின்றனர்.. அவர்களுக்கு விழிப்புணர்வு முயற்சியாக இந்த படத்தை இயக்குனர் நந்தா கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு.
Badavaa movie review