BREAKiNG திவ்யபாரதியை கலாய்த்த ஜிவி. பிரகாஷ்..; நீ ஏன் நடிக்க போற.; ‘கிங்ஸ்டன்’ விழாவில் வெற்றிமாறன் பேச்சு

BREAKiNG திவ்யபாரதியை கலாய்த்த ஜிவி. பிரகாஷ்..; நீ ஏன் நடிக்க போற.; ‘கிங்ஸ்டன்’ விழாவில் வெற்றிமாறன் பேச்சு

 

BREAKiNG திவ்யபாரதியை கலாய்த்த ஜிவி. பிரகாஷ்..; நீ ஏன் நடிக்க போற.; ‘கிங்ஸ்டன்’ விழாவில் வெற்றிமாறன் பேச்சு

 

 

பாடகர் இசையமைப்பாளர் என அறியப்பட்ட ஜிவி பிரகாஷ் ஒரு கட்டத்தில் நடிகராகவும் உருவெடுத்து வளர்ந்தார்.. தற்போது தயாரிப்பாளராக உருவெடுத்து இவர் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள திரைப்படம் ‘கிங்ஸ்டன்’.

அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் நாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார். இவர்களுடன் சேத்தன், அழகம்பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இன்று பிப்ரவரி 27ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி எஸ் தானு, இயக்குனர்கள் வெற்றிமாறன், பா ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து மற்றும் சுதா கொங்கரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

முன்னதாக கலைப்புலி எஸ் தாணு பேசும்போது.. “இளையராஜா மற்றும் ரகுமானுக்குப் பிறகு உலக தரத்தில் நல்ல இசையை கொடுத்து வருகிறார் ஜிவி பிரகாஷ்.. அவரின் அசுரன் படத்தில் அந்த உழைப்பை பார்த்தேன்” என பாராட்டினர் கலைப்புலி தாணு.

இயக்குனர் வெற்றிமாறன் பேசும்போது..

“பல வருடங்களுக்கு முன்பு நான் இரவு நேரத்தில் ஜிவி பிரகாஷை இரவு 2 மணிக்கு அழைத்தேன். அப்போது கூட அவர் ஸ்டூடியோவில் உழைத்துக் கொண்டிருந்தார்.. எப்போதுமே ஓய்வில்லாமல் இசைப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பார்.

ஒரு கட்டத்தில் நடிகராக போகிறேன்.. என்றார் ஏன் நடிக்கப் போகிறீர்கள் என்று கேட்டேன்.. ஆனாலும் இன்று நடிகராக உயர்ந்திருக்கிறார்.. அதுபோல சில வருடங்களுக்கு முன்பு நான் தயாரிப்பாளராகவும் ஆகப்போகிறேன் என்றார்.. அதன்படி கிங்ஸ்டன் படத்தை எடுத்து இருக்கிறார்.

இந்தப் படத்தைப் பற்றி அவர் எப்போதும் அடிக்கடி பேசிக் கொண்டே இருப்பார்.. படம் பிரம்மாண்டமான படம்.. முதன் முதலில் கடல் சார்ந்த SEA FANTASY ஃபேண்டஸி படம் என அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்.

ஒரு நாள் படத்தின் செட்டுக்கு நான் சென்றேன்.. என்னுடைய படத்திற்கு ஒரு செட்டு போட வேண்டும் என்பதால் அதை பார்க்க நினைத்தேன்.. அப்பொழுது படு பயங்கரமாக இருந்தது.. நிஜமாலுமே வியக்கும் அளவுக்கு செட் போடப்பட்டிருந்தது.. நான் நிச்சயமாக இதுக்கு பல கோடிகள் செலவாயிருக்கும் என்று மீண்டும் மீண்டும் கேட்டேன்.. நான் நினைத்த தொகையில் அவர்கள் 10% பட்ஜெட் மட்டுமே சொன்னார்கள்.. அந்த அளவிற்கு குறைந்த செலவில் மிகத் தரமான செட் போடப்பட்டிருந்தது.

அதில் எப்பொழுது மழை மட்டுமல்ல பனியும் பெய்து கொண்டே இருக்கும்.. நிஜமாலுமே இங்கு உள்ள நடிகர்கள் பேசியது போல அந்த செட்டில் நடிப்பது மிகவும் கஷ்டம்.. எப்போதும் வழுக்கிக் கொண்டே இருக்கும்.. ஆனாலும் நல்லவிதமாக நடித்தார்கள்.. அப்படி நடித்தால் தான் அந்த வெற்றி நமக்கு நல்ல பெயரை கொடுக்கும்.

இயக்குனர் கமல் பிரகாஷிற்கு வாழ்த்துக்கள்.. எந்த வெற்றிகள் வந்து உங்களை சேர்ந்தாலும் நீங்கள் இதே பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.. உங்களை நம்பி ஜீவி பிரகாஷ் படம் தயாரித்திருக்கிறார்.. உங்களது ஐடியா மட்டுமல்ல உங்களது நல்ல மனதிற்காகவும் அவர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.. எனவே நீங்கள் எப்பொழுதும் தயாரிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து நல்ல இயக்குனராக வளர வேண்டும்.. வாழ்த்துக்கள்” என்று பேசினார் இயக்குனர் வெற்றி மாறன்..

நாயகன் ஜிவி பிரகாஷ் பேசும்போது…

Kingston படத்திற்காக கடும் உழைப்புடன் அர்ப்பணிப்புடன் உழைத்த கலைஞர்கள் அனைவரையும் பாராட்டி பேசினார் ஜிவி பிரகாஷ்.. இந்தப் படத்தில் ஆர் டைரக்டர் மூர்த்திக்கு நிச்சயம் விருதுகள் கிடைக்கும்.. அப்படி ஒரு அர்ப்பணிப்புடன் அழகான செட்டுகளை அமைத்திருக்கிறார்..

நாயகி திவ்யபாரதி மேடையில் பேசும்போது பத்திரிகையாளர்களை சந்தித்து இரண்டு வருடம் ஆகிவிட்டது என்றார்.. ஆனால் அவர் இன்ஸ்டாகிராம் மூலம் எப்பொழுது சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்” என கலாய்த்து பேசினார்.

Vettrimaran and GV Prakash speech at Kingston trailer launch

 

 

Related articles