சிவகார்த்திகேயன் படத்திற்கு (மீண்டும்) பழைய டைட்டிலை வைத்த முருகதாஸ்

சிவகார்த்திகேயன் படத்திற்கு (மீண்டும்) பழைய டைட்டிலை வைத்த முருகதாஸ்

 

சிவகார்த்திகேயன் படத்திற்கு (மீண்டும்) பழைய டைட்டிலை வைத்த முருகதாஸ்

 

தமிழ் சினிமா இயக்குனர்களில் பிரபலமானவர் ஏ ஆர் முருகதாஸ்.. இவரது படங்களுக்கு என்று ரசிகர் பட்டாளம் எப்பொழுதும் உண்டு.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் படத்தை முருகதாஸ் இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியானவுடன் அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்தது.

நீண்ட நாட்களாக படத்தின் தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு அப்டேட் வெளியாகி உள்ளது.

இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் படத்தின் பெயரை ‘மதராஸி’ என அறிவித்துள்ளார்கள்.

இதே பெயரில் அர்ஜுன் இயக்கம் நடிப்பில் 2006ல் ஒரு படம் வெளிவந்தது..

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பராசக்தி’ படப் பெயரும் பழைய படப் பெயர்தான். கடந்த வருடம் வெளிவந்த ‘அமரன்’ படமும் பழைய படத்தின் பெயர்தான்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான படங்களில் ‘எதிர் நீச்சல், காக்கி சட்டை, வேலைக்காரன், மாவீரன்’ ஆகிய பழைய படப் பெயர்கள் பட்டியலில் தற்போது மதராசி என்ற படமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்ல கதை படங்களை சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்து நடித்து வரும்போது படத்தின் தலைப்பையும் புதுமையாக வைக்கலாமே என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இனியாவது சிவகார்த்திகேயன் மாற்றிக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.?

Ar Murugadoss and Sivakarthikeyan movie titled Madharasi

 

—–