Lovers Day : காதலர்களுக்கு விருந்தாக திரைக்கு வரும் 10 படங்கள் ஒரு பார்வை

Lovers Day : காதலர்களுக்கு விருந்தாக திரைக்கு வரும் 10 படங்கள் ஒரு பார்வை

 

Lovers Day : காதலர்களுக்கு விருந்தாக திரைக்கு வரும் 10 படங்கள் ஒரு பார்வை

 

வருகிற பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் 10 திரைப்படங்கள் பற்றி ஒரு பார்வை இதோ…

சுசீந்திரன் இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி உள்ள 2கே லவ் ஸ்டோரி திரைப்படம்.. இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு காமெடி மன்னன் கவுண்டமனி நாயகனாக நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படமும் பிப்ரவரி 14 அன்று திரைக்கு வருகிறது.. இதில் முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார்.. இப்படத்தை சாய் ராஜகோபால் இயக்கி உள்ளார்.

பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட படவா படமும் திரைக்கு வருகிறது இந்த படத்தில் விமல் மற்றும் சூரி இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை நந்தா இயக்கி உள்ளார்.

நடிகர் ஜெய், சத்யராஜ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள பேபி & பேபி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை பிரதாப் இயக்கி உள்ளார்.

ஸ்ரீகாந்த் மற்றும் சிந்தியா நடித்துள்ள தினசரி படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஜி சங்கர் இயக்கி உள்ளார்.. நாயகி சிந்தியா தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.. சில மாதங்களுக்கு முன் ரஜினி & இளையராஜாவுடன் இணைந்து இவர் எடுத்த போட்டோ இணையதளங்களில் வைரலானது.

பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் இயக்கியுள்ள ஃபயர் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்சி அகர்வால் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்..

மலேசியாவைச் சேர்ந்த புதுமுகங்கள் நடித்துள்ள ‘கண்நீரா’ திரைப்படம் காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகிறது. கதிரவன் இயக்கி இருக்கிறார்.

‘ஜெய் பீம்’ பட நடிகை லிஜோமோல் ஜோஸ் லெஸ்பியனாக நடித்துள்ள ‘காதல் என்பது பொதுவுடைமை’ திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது.. இதில் வினித் மற்றும் ரோகினி முக்கிய வேடத்தில் நடிக்க ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார்.

மேலும் வெட்டு என்கிற படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ராஜசேகர் இயக்க தமன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படங்களுடன் விஜய் டிவி புகழ் நடிகர் ராமர் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘அது வாங்கினால் இது இலவசம்’ என்ற படமும் திரைக்கு வருகிறது.

10 Tamil movies releasing on 14th February 2025