ஒரு வழியா ‘மதகஜ ராஜா’ வர்றாரு..; எதிர்பார்க்கப்பட்டு ரிலீஸாகாத படங்கள் லிஸ்ட் இதோ…

ஒரு வழியா ‘மதகஜ ராஜா’ வர்றாரு..; எதிர்பார்க்கப்பட்டு ரிலீஸாகாத படங்கள் லிஸ்ட் இதோ…

ஒரு வழியா ‘மதகஜ ராஜா’ வர்றாரு..; எதிர்பார்க்கப்பட்டு ரிலீஸாகாத படங்கள் லிஸ்ட் இதோ…

 

2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம்.. தற்போது 13 ஆண்டுகளுக்கு பின்னர் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியாகிறது.

ரிலீசுக்கு பல சிக்கல்களை சந்தித்த இந்த படம் ஒரு வழியாக நிச்சயமாக இந்த ஆண்டு வெளியாகும் என ரசிகர்களாலும் படக்குழுவினராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் எதிர்பார்த்த படங்கள் இதுவரை திரைக்கு வராத படங்கள் என்னென்ன என்பதன் லிஸ்ட் இதோ…

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’.

ஜிவி பிரகாஷ் மற்றும் வெண்பா இணைந்து நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி & விஷ்ணு விஷால் இணைந்து நடித்த ‘இடம் பொருள் ஏவல்’.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்தசாமி மற்றும் ஸ்ரேயா இணைந்து நடித்த ‘நரகாசூரன்’.

மேலும் அரவிந்தசாமி நடித்துள்ள ‘கள்ள பார்ட்’ மற்றும் ‘வணங்காமுடி’

அரவிந்தசாமி & த்ரிஷா இணைந்து நடித்த ‘சதுரங்க வேட்டை 2’

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘மன்னவன் வந்தானடி’

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடித்த ‘இறாவாக்காலம்’.

பிரபுதேவா & லட்சுமிமேனன் இணைந்து நடித்துள்ள ‘எங் மங் சங்’..

சந்தானம் நடிப்பில் உருவான ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள கிட்டத்தட்ட 4 படங்கள் இதுவரை ரிலீசாகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Movie ready to release But yet to release list