2025 இந்தியாவில் தமிழ்நாடு ஃபர்ஸ்ட்..; எதிர்பார்ப்பை விட எகிறியது டாஸ்மாக் கலெக்ஷன்

2025 இந்தியாவில் தமிழ்நாடு ஃபர்ஸ்ட்..; எதிர்பார்ப்பை விட எகிறியது டாஸ்மாக் கலெக்ஷன்

 

2025 இந்தியாவில் தமிழ்நாடு ஃபர்ஸ்ட்..; எதிர்பார்ப்பை விட எகிறியது டாஸ்மாக் கலெக்ஷன்

 

 

தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளுடன் இணைந்து 3000 பார்களும் உள்ளன.

டாஸ்மாக் கடைகளில் சராசரியாக தினமும் ரூ.150 கோடி வார இறுதி நாட்களில் ரூ.200 கோடி, பண்டிகை தினங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு 2025 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 31, ஜனவரி 1-ந்தேதிகளில் சுமார் ரூ.425+ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது..

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடே முதலிடம் பிடித்துள்ளது. தெலுங்கானாவில் ரூ.401 கோடிக்கும், ஆந்திராவில் ரூ.327 கோடிக்கும், கர்நாடகாவில் ரூ.307 கோடிக்கும், கேரளாவில் ரூ.107 கோடிக்கும் (டிசம்பர் 31-ந்தேதி மட்டும்), புதுச்சேரியில் ரூ.52 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளதாம்.

அரசு தரப்பில் புத்தாண்டு டாஸ்மாக் வசூல் அறிவிக்கப்படவில்லை.. அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Tasmac Liquor New Year sales first place Tn in India