‘விடாமுயற்சி’ பட Sawadeeka & khàawp khun அர்த்தம் தெரியுமா.? இனி தெரிஞ்சி பாடுங்க
‘விடாமுயற்சி’ பட Sawadeeka & khàawp khun அர்த்தம் தெரியுமா.? இனி தெரிஞ்சி பாடுங்க
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கஸாண்ட்ரா, ஆரவ், ரம்யா சுப்ரமணியன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விடாமுயற்சி.’
லைக்கா நிறுவனம் இந்த படத்தை கிட்டத்தட்ட 250+ கோடியில் உருவாக்கியதாக கூறப்படுகிறது
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தனது காணாமல் போன மனைவியை தேடி ஒரு பாலைவன பகுதிக்கு செல்லும் ஹீரோ அங்கு மனைவியை கண்டுபிடித்தாரா? குண்டர்களிடமிருந்து தப்பித்தாரா? என்பது தான் படத்தின் கதை என கூறப்படுகிறது..
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தில் இடம் பெற்ற சவடீதா என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.
அறிவு பாடல் வரிகள் எழுத ஆண்டனி தாசன் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த நிலையில் தான் சவடீகாவிற்கு அர்த்தம் என்ன? என பலர் தெரியாமல் குழம்பி உள்ளனர்..
தாய்லாந்து தாய்மொழியில் Sawadeeka சவடீகா என்பதற்கு வெல்கம் என்று அர்த்தம். இதே போன்று தான் khàawp khun என்றால் நன்றி என்று அர்த்தம்.” ..
THANK YOU in Thai is khàawp khun (ขอบคุณ),
Vidaamuyarchi song Sawadeeka meaning is here

