ஜெயம் ரவி – கணேஷ் கே பாபு கூட்டணியில் இணைந்த நட்சத்திரங்கள்
ஜெயம் ரவி – கணேஷ் கே பாபு கூட்டணியில் இணைந்த நட்சத்திரங்கள்
ஜெயம் ரவி நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘பிரதர்’ படம் படு தோல்வியை சந்தித்தது..
இதனையடுத்து ரவி நடிப்பில்
‘காதலிக்க நேரமில்லை’, ‘ஜெனி’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
இந்தப் படங்களையடுத்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். ஜெயம் ரவியின் 34-வது படமாக உருவாகும் இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கிறார்..
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க . தவ்தி ஜிவால் நாயகியாக நடிக்க பி.வாசுவின் மகன் சக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.. மேலும் தர்மராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்..
இதனிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ படத்திலும் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புகொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது..
Jayam Ravi and Ganesh Babu movie started


