க….. அஜித்தே… அநாகரீகமாக தேவையில்லாமல்.. ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை
க….. அஜித்தே… அநாகரீகமாக தேவையில்லாமல்.. ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை
தமிழகத்தில் நடிகர் அஜித்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.. இவரை ரசிகர்கள் அன்புடன் தல என்று அழைத்து வந்தனர்.. ஆனால் என்னைத் தல என்று அழைக்க வேண்டாம்.. எனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம்..
ரசிகர்கள் குடும்பத்தை பார்த்தால் போதும்… என் படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை.. நல்ல படம் விளம்பரம் இல்லாமல் ஓடும்.. என பல அறிக்கைகள் ஒன்றும் பின் ஒன்றாக விட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சமீபகாலமாக பல ஊடகங்களில் வீடியோக்களில் கடவுளே.. அஜிதே… என்று ரசிகர்கள் கூச்சல் போட்டு வந்தனர்.. இது பல இடங்களில் பொதுமக்களுக்கு அசௌகரியமாக இருந்து வந்தது.. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் முதல் முறையாக இந்த விஷயம் பற்றி நடிகர் அஜித் தன்னுடைய மேனேஜர் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்..
பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடவுளே.. அஜித்தை என்று அநாகரிகமாக கூச்சலிட வேண்டாம்.. செய்ய வேண்டாம் என நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்.. அவர்கள் நல்ல குடிமக்களாக வாழ வேண்டும் என நடிகர் அஜித் அறிவுறுத்துள்ளார்.
Ajith statement regarding fans shout Kadavulae

