உலக சினிமாவில் முதன்முறை : ஒரே நேரத்தில் மோகன்லாலின் 5 படங்கள் ரிலீஸ் அறிவிப்பு

உலக சினிமாவில் முதன்முறை : ஒரே நேரத்தில் மோகன்லாலின் 5 படங்கள் ரிலீஸ் அறிவிப்பு

 

 

உலக சினிமாவில் முதன்முறை : ஒரே நேரத்தில் மோகன்லாலின் 5 படங்கள் ரிலீஸ் அறிவிப்பு

 

ஒரு நட்சத்திர நடிகர் நடித்து வரும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பதிலேயே பல மாதங்கள் கடக்கும்.. அப்படியான சூழ்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் ஐந்து படங்கள் ரிலீஸ் தேதியை ஒரே நேரத்தில் அறிவித்துள்ளது இந்திய சினிமாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது..

நடிகராக அறியப்பட்ட மோகன்லால் தற்போது முதல் முறையாக ‘பரோஸ்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார்.

மோகன்லால் இயக்கியுள்ள ‘பரோஸ்’ திரைப்படம் வரும் 2024 டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸ் ஆகவுள்ளது.

மேலும் மோகன்லால், ஷோபனா நடித்துள்ள ‘துடரும்’ படம் 2025 ஜனவரி 30ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் இரண்டாம் பாகமாக ‘எம்புரான்’ 2025 மார்ச் 27ம் தேதியும், சத்யன் அந்திகாடு டைரக்சனில் நடித்துவரும் ‘ஹிருதயபூர்வம்’ படம் 2025 ஆகஸ்ட் 28ம் தேதியும், தெலுங்கில் அவர் நடித்து வரும் 2025 ‘விருஷபா’ படம் அக்டோபர் 16ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது..

Mohanlals 5 movie release date announcement