ரஜினி – விஜய் – அஜித் செய்யாத சாதனையை செய்த The One சூர்யா
ரஜினி – விஜய் – அஜித் செய்யாத சாதனையை செய்த The One சூர்யா
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘சீன்’ திரைப்படம் கடந்த நவம்பர் 6-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. 2D Entertainment மற்றும் Zhagaram Studios நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
இதில் சூர்யா ஏற்றுள்ள காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. அவரது வழக்கத்திற்கு மாறான நடிப்பு, நகைச்சுவை கலந்த உடல்மொழி, அதிரடியான அணுகுமுறை என ஒரு புதிய கோணத்தில் சூர்யாவை இயக்குநர் ஜித்து மாதவன் வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் நஸ்ரியா மற்றும் நஸ்லெனின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், ‘சீன்’ திரைப்படம் வெளியான ஆறாவது நாளில் உலகளவில் ரூ.205 கோடி வசூலைக் கடந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
www.rightnewsraja.com
இதன் மூலம் ஒரே ஆண்டில் ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’, ‘சீன்’ எனத் தொடர்ந்து மூன்று திரைப்படங்களை ரூ.200 கோடி வசூல் சாதனைக்குக் கொண்டு சென்ற நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். மூன்று திரைப்படங்களும் வெவ்வேறு கதைக்களம், மாறுபட்ட இயக்குநர்களின் அணுகுமுறை என அமைந்திருந்தாலும், அவை அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களின் வெற்றியால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தற்போதும் திரையரங்குகளில் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டை சூர்யாவின் வெற்றிகரமான ஆண்டாக மாற்றியுள்ள ‘சீன்’, அவரது திரைப்பயணத்தில் மற்றுமொரு முக்கியமான வசூல் சாதனையாக அமைந்துள்ளது…

The One Suriya beats Rajini Vijay Ajith records
கூடுதல் தகவல்…
ரஜினி விஜய் அஜித் உள்ளிட்ட நடிகர்கள் இதுபோல ₹ 200 கோடி வசூல் சாதனை செய்திருந்தாலும் இவர்களில் யாரும் ஒரே ஆண்டில் மூன்று ₹ 200 கோடி வசூல் செய்த வெற்றி படங்களை கொடுத்ததில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது..
—–

