TVK மாநாட்டுக்கு வரவேண்டிய ரசிகர்களுக்கு கண்டிஷன் போட்ட விஜய்
TVK மாநாட்டுக்கு வரவேண்டிய ரசிகர்களுக்கு கண்டிஷன் போட்ட விஜய்
நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.. அவரின் கட்சி தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு நாளை அக்டோபர் 27 விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது.. இதற்காக தமிழக முழுவதும் இருந்து அவரது ரசிகர்களும் தொண்டர்களும் விக்கிரவாண்டிக்கு விரைந்து வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் மாநாட்டுக்கு எப்படி வரவேண்டும் என நடிகர் விஜய் x பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில்..
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்…
பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.
காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்.
அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு,
மாநாடு சார்ந்து
காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும்.
நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம்.
மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.
தோழமையுடன்,
உங்கள் விஜய்
Vijay conditions to his fans for TVK event
—-
மேலும் எந்தெந்த பொருட்களை மாநாட்டுக்கு கொண்டு வரக்கூடாது எனவும் அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.. அந்த பலகையில்…


