‘ஜெயிலர் 2’ உடன் ‘ட்ரோன்ஸ்’ ரிலீஸ் ஏன்.? ‘சினிமா வாலா’ சதீஷ் விளக்கம்..; எனக்கு 2 ஹீரோயின்னா தப்பா பேசுவாங்க.. – டிராவிட்
‘ஜெயிலர் 2’ உடன் ‘ட்ரோன்ஸ்’ ரிலீஸ் ஏன்.? ‘சினிமா வாலா’ சதீஷ் விளக்கம்..; எனக்கு 2 ஹீரோயின்னா தப்பா பேசுவாங்க.. – டிராவிட்
‘பன் பட்டர் ஜாம்’ பட இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், ஜிஎம் மோர்கன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி படம் DRONES ‘ட்ரோன்ஸ்’.
இதில் நடிகைகள் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் ஆகியோருடன் தேவதர்ஷினி, பரிதாபங்கள் புகழ் டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமா வாலா சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் ஆர்ஜே தீபக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படமானது வரும் அக்டோபர் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.. இதற்கு முந்தைய நாள் அக்டோபர் 15ஆம் தேதி ரஜினி நடித்த ‘ஜெய்லர் 2’ படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது..
இந்த நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சென்னையில் நேற்று சந்தித்தனர்..
இந்த விழாவில்…
சினிமாவாலா சதீஷ், பரிதாபங்கள் டிராவிட், ஆர் ஜே தீபக் மற்றும் நடிகைகள் சித்தி இதானி அஞ்சலி நாயர் உள்ளிட்டார் பங்கேற்றனர்.. நடிகர் குரேஷி தேவதர்ஷினி இயக்குனர் வரவில்லை..

நடிகை அஞ்சலி நாயர் பேசும்போது..
இந்த படம்.. ஹாரர் ஃபேண்டஸி திரில்லர் படமாக இருந்தாலும் இந்த படத்தில் கலர் குறித்த ஒரு அரசியல் பேசப்பட்டுள்ளது.. நாம் மாநிறம் பெண்ணாக நடித்திருக்கிறேன். எப்போதும் தென் இந்தியர்களை வட இந்தியர்கள் கலர் குறித்து பேசுவார்கள்.. அந்த கருத்தும் இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது.” என்றார்..
www.rightnewsraja.com

மேடையில் சித்தி இதானி பேசும் போது..
“உங்கள் எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி இருக்கும்.. இந்த வருடத்தின் மிகப்பெரிய படம் ஜெயிலர் 2 வரும்போது ட்ரோன்ஸ் படம் வருவது ஏன்? என்று.. நான் ஒரு தலைவர் ரசிகை.. தலைவர் படத்தை தான் நாங்கள் முதலில் பார்ப்போம். அதன் பின்னர் தான் அடுத்த நாள் எங்கள் படத்தை பார்ப்போம்.. மாநிலம் கடந்து இந்தியா கடந்து உலகம் முழுவதும் உள்ள மூளை முடுக்கைகள் எல்லாம் புகழ்பெற்றவர் ரஜினிகாந்த்.. அவருடன் நாங்கள் வருவது பெருமை அடைகிறோம்.. மேலும் இது நவராத்திரி பண்டிகை காலம் எனவே நிறைய விடுமுறை நாட்கள் இருக்கிறது..” என்று பேசினார்..

பரிதாபங்கள் டிராவிட் பேசும் போது…
“என்னை இந்தப் படத்தில் பணியாற்ற செய்தவர் சினிமா வாலா சதீஷ்.. அவர்களுக்கு நன்றி எனக்கு இந்த படத்தில் 2 ஹீரோயின்ஸ் என்றார்கள்..
நானே பரிதாபங்கள் தொடரில் ஹீரோயின் கேரக்டர் தான் செய்கிறேன் என்றேன்.. நீ இனி பையன் கேரக்டர் செய் என்றார்கள்.. எனக்கு முதலில் பயமாக இருந்தது.. தப்பா பேசுவார்கள் என்று பயந்தேன் ஆனால் சித்தி அஞ்சலி நாயர் இருவரும் என்னிடம் கபோர்ட் நடந்து கொண்டார்கள்.
சித்தி சீனியர் என்றாலும் எல்லாரிடமும் சகஜமாக பழகினார்.. பரிதாபங்கள் கோபி சுதாகர் இருவரும் என்னை கலாய்த்து கொண்டிருந்தனர்.. ரெண்டு ஹீரோயின் ஹீரோ வரார்.. மாமி இரண்டா என்று எல்லாம் கலாய்த்தார்கள்..
மேலும் “மக்களிடம் பணம் வசூலித்து பரிதாபங்கள் பேனரில் உருவான படத்தில் பணிகள் முடிவடைந்து விட்டது.. விரைவில் பத்திரிகையாளர்கள் சந்தித்து அந்த படம் தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் விடை அளிப்பார்கள்.. என்றார் ”
www.rightnewsraja.com

சினிமாவாலா சதீஷ் பேசும்போது…
“நான் சினிமாவுக்கு வரும்போது நடிக்க தான் வந்தேன்.. ஆனால் சில காரணங்களோ அது முடியாமல் போனது சின்ன சின்ன கேரக்டர் நடித்தேன்.. இந்த படத்தில் ஒரு நீண்ட கேரக்டர் கிடைத்துள்ளது. படம் நன்றாக வந்துள்ளது.. எல்லோரும் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது என்றார்..
பின்னர் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது…
இந்தப் படத்தில் குழந்தைகள் என்ஜாய் செய்யும் நிறைய விஷயங்கள் இருக்கிறது.. இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே இது விடுமுறை காலங்களில் தான் விட வேண்டும் என்று நினைத்தோம்.. பள்ளி மாணவர்கள் குழந்தைகள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என நினைத்தோம்..
பண்டிகை காலத்தில் (நவராத்திரி ஆயுத பூஜை) விடுமுறை காலத்தில் வருவதால் குழந்தைகள் கொண்டாடுவதற்கான நேரம் இருக்கிறது.. ஜெய்லர் படத்தை பார்த்துவிட்டு வருபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.. அந்தப் படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் இந்த படத்திற்கு வருவாகள்.. மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை..” ஜெயிலர் படத்துடன் நாங்கள் வருவது சந்தோசம்” என்று பேசினார்..
Cinema Wala Sathish reaction for Why Drones Clash with Jailer 2

