என்கவுண்டர் போலீசாக வெற்றி நடிக்கும் பரீட் – BURIED First Look
என்கவுண்டர் போலீசாக வெற்றி நடிக்கும் பரீட் – BURIED First Look
*‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ’பரீட்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார்.
‘8 தோட்டாக்கள்’ புகழ் நடிகர் வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்..
கதையின் நாயகியாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா நடிக்கிறார். சாந்தினி தமிழரசன், பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை கே.வி கிரண் கவனிக்கிறார். டான்பாஸ்கோ படத்தொகுப்பை மேற்கொள்ள, கலை இயக்கத்தை காந்தாரா உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய வேலு கவனித்திருக்கிறார். நடனத்தை ரிச்சி ரிச்சர்ட்சன் வடிவமைத்திருக்கிறார்.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலிஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய பணியில் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார், அதனால் அவரது குடும்ப வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்புகளை சந்திக்கிறார், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை மையப்படுத்தி இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் போலீஸை மையப்படுத்தி உருவாகியுள்ள ஒரு முக்கியமான பாடலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளார்..
சென்னை, கோவை, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Vettri as Encounter Specialist in Buried movie

