‘சலார் 2’ முதல் கல்கி 2’ வரை..; ₹ 2000 கோடி முதலீட்டில் பிரபாஸ் படங்கள்
‘சலார் 2’ முதல் கல்கி 2’ வரை..; ₹ 2000 கோடி முதலீட்டில் பிரபாஸ் படங்கள்
‘பாக்ஸ் ஆபிஸ் டைட்டன்’ பிரபாஸிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
பிரபாஸின் பிறந்த நாளான இன்று இந்திய திரையுலகில் அவருடைய கலை பயணத்தையும், அவர் தொடர்ந்து முறியடித்து வரும் சாதனைகளையும் நினைத்துப் பார்ப்பது அவசியம்.
பிரபாஸ் முதல் முதலில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் என்பதை.. அதற்கான கருத்தாக்கத்தை மறு வரையறை செய்து, தனக்கான படங்களின் மூலம் புதிய எல்லைகளை அமைத்து வருகிறார்.
மேலும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை அவர் தொடர்ந்து வசீகரிக்கிறார்.
பாக்ஸ் ஆபிஸில் அவர் புதிதாக படைத்த சாதனைகளின் பட்டியலை காண்போமா..!
பிரபாஸின் படங்கள் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிப்பதாகவே அறியப்படுகின்றன. ‘ பாகுபலி : தி பிகினிங்’ திரைப்படம் முதல் நாளில் 75 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து வெளியான ‘பாகுபலி : தி கன்குளுஷன்’ எனும் திரைப்படம் தொடக்க நாளில் பாக்ஸ் ஆபீஸை பிரமிக்க வைக்கும் வகையில் 200 கோடி ரூபாயை வசூலித்து, அவரின் சினிமா சக்தியை பறைசாற்றியது.
‘சாஹோ’ திரைப்படம் தொடக்க நாளில் 130 கோடி ரூபாயையும், ‘சலார் ‘திரைப்படம் தொடக்க நாளில் 178 கோடி ரூபாயும், ‘கல்கி 2898 கிபி’ எனும் திரைப்படம் தொடக்க நாளில் 180 கோடி ரூபாயும் வசூலித்து சாதனை படைத்தது.
இவை யாவும் பிரபாஸ் – ‘பாக்ஸ் ஆபிஸ் டைட்டன்’ என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.
பிரபாஸின் திரையுலக வாழ்க்கையில் முன் எப்போதும் இல்லாத வகையில் அவர் படைத்த சாதனைகள் வியக்க வைக்கிறது. இந்திய சினிமாவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டிய இரண்டு திரைப்படங்களில் நடித்த இரண்டு நடிகர்களில் இவரும் ஒருவர். ‘பாகுபலி 2’ அந்த சாதனையை நிகழ்த்திய முதல் படம். இந்த மைல்கல் அவரது திறமையை மட்டும் அல்ல தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அவருடைய படங்கள் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும் பிரதிபலித்தது.
பிரபாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான ‘கல்கி 2898 கிபி’ திரைப்படம் இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படைப்புகளில் ஒன்றாகும். இந்த திரைப்படம் உலக அளவில் வியக்க வைக்கும் அளவிற்கு 1,100 கோடி ரூபாயை வசூலித்து.. பிரபாஸை உலகளாவிய சினிமா ஐகானாக உயர்த்தியது. மேலும் இந்த திரைப்படம் இந்திய திரை உலகில் ஒரு புதிய சாதனையையும் படைத்தது. இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் வாரத்தில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.
இதனால் பிரபாஸின் செல்வாக்கு இந்தியாவையும் கடந்து உலக அளவில் விரிவடைந்தது. சர்வதேச சந்தையில் ஈர்க்கக்கூடிய வசூலையும் படைத்தது. ‘பாகுபலி 2 ‘வெளிநாடுகளில் 396.5 கோடி ரூபாயையும், ‘கல்கி 2898 கிபி ‘ திரைப்படம் உலக நாடுகளில் 275.4 கோடி ரூபாயையும் வசூலித்தது. ‘சலார் பார்ட் 1’ திரைப்படம் 137.8 கோடிகளையும் ‘சாஹோ’ திரைப்படம் 78.5 கோடி ரூபாயும் வசூலில் குவித்தது. இதன் மூலம் பிரபாஸின் ஆதிக்கம் இந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
தயாரிப்பாளர்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் அவர் நடிக்கும் படங்களில் முதலீடு செய்வது .. அவருடைய நட்சத்திர சக்தி தெளிவாக தெரிகிறது. இதன் காரணமாக ‘சலார் 2’ 360 கோடி ரூபாய் முதலீட்டிலும் , ‘கல்கி 2’ 700 கோடி ரூபாய் முதலீட்டிலும் தயாராகி வருகிறது. இருப்பினும் இந்த இரண்டு படங்களும் இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளாக இருப்பதுடன் அதற்கு மையப் புள்ளியாக பிரபாஸ் திகழ்கிறார்.

*‘சலார் 2 முதல் கல்கி 2’ வரை … 2,100 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் சூப்பர் ஸ்டார் பிரபாஸின் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்..!*
பிரபாஸின் பிறந்த நாளில் ‘சலார் 2 முதல் கல்கி 2’ வரை அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்.. 2,100 கோடி ரூபாய் வசூலிக்கும் என பந்தயம் கட்டப்பட்டிருக்கிறது.
முதல் பான் இந்திய சூப்பர்ஸ்டாரான பிரபாஸ், அவருடைய தொழில் சார் வாழ்க்கையில் புதிய உச்சத்தில் இருக்கிறார். இதனால் அவரது பிறந்த நாளை நடிகராக மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை மாற்றி அமைத்த நட்சத்திரமாகவும் கொண்டாடுகிறார்கள்.
முதல் பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸின் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’, ‘சலார்’, ‘கல்கி 2898 கிபி’ போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்து இந்திய சினிமாவில் மறுக்க இயலாத சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். பார்வையாளர்கள் மீது அவர் வைத்திருக்கும் தீராத விசுவாசம் பிளாக்பஸ்டர் ஹிட்டிற்கு பிறகும் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் அவருடைய திரைப்படங்களில் பிரம்மாண்டமான முறையில் முதலீடு செய்வது எளிதாகிறது.
பெரிய திரையில் பிரபாஸ் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும்.. அதற்கான தோற்றமும்.. அவருடைய நடிப்பும் …ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களின் அபரிமிதமான அன்பையும், பாராட்டையும் பெறுகிறது.
இது அவரது கவர்ச்சிக்கும், நட்சத்திர சக்திக்கும் ஒப்பிட முடியாத அளவில் இருக்கிறது. அதே தருணத்தில் அவர் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். திரை துறை வணிகர்களின் தரவுகளின் படி, தயாரிப்பாளர்கள் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிய அளவில் முதலீடுகளை செய்து ஆதரிக்கவும் தயாராக உள்ளனர்.
இந்த வரிசையில் அவர் நடிப்பில் தயாராகி வரும் படங்களின் பட்டியலை தொடர்ந்து காண்போம்.
‘சலார் 2’ : இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ஹை- வோல்டேஜ் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படம் இது. இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஸ்பிரிட்: இந்தி சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக ‘ஸ்பிரிட்’ இருக்கிறது. இந்தப் படத்தில் முதன்முறையாக பிரபாஸ் – பரபரப்பிற்கு பெயர் பெற்ற இயக்குநரான சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்திருக்கிறார்.
இயக்குநர் ஹனு ராகவ புடி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம்- 1940 ஆம் ஆண்டுகளில் பின்னணியில் சரித்திர புனைவு கதையாக தயாராகிறது. இந்தத் திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மேற்கொள்கிறார்.
The Raja Saab: இந்த திரைப்படம் – இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் காதலும் காமெடியும் கலந்த திகில் படமாகும். இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பிரபாஸுடன் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
கல்கி 2 : ‘கல்கி 2898 கிபி’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. பிரபாஸ் ,தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படங்கள் அனைத்தும் பிரபாஸின் திறமை மற்றும் அவரது நட்சத்திர பலத்திற்காக தயாராகும் திரைப்படங்கள். இந்த திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் 2,100 கோடி ரூபாயை முதலீடு செய்து இருக்கிறார்கள். இது அவரது அற்புதமான ஈர்ப்பு- அவரின் நட்சத்திர சக்தி- சர்வதேச தரம்- பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் திறன்- போன்ற அம்சங்களுக்காகவும், அவருடைய சூப்பர் ஸ்டார் நட்சத்திரத்திற்கான சான்றும் ஆகும். அவரது அயராத பணிக்கு ஆதரவு தெரிவிக்கும் சினிமா ஆர்வலர்களின் ஆசிர்வாதம் இது என்றும் குறிப்பிடலாம்.
பிரபாஸ் .. கவர்ச்சி- திறமை – மேஜிக் ஆகியவற்றின் சரியான கலவையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய வெற்றியாக மாற்றம் பெறுவதையும் உறுதி செய்கிறார். இந்த பிறந்த நாளில் பிரபாஸ் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்த 2,100 கோடி ரூபாயும் அவரது ரசிகர்களுக்காக அவர் வழங்கும் அற்புதமான படைப்புகள் ஆகும். இதனையும் அவரது பிறந்தநாளில் கொண்டாடுவோம்..
Actor Prabhas movie budget and collections


