விக்ராந்த் – ரித்விகா ஜோடிக்கு ‘தீபாவளி போனஸ்’ தரும் விநியோகஸ்தர் ஜெனீஷ்

விக்ராந்த் – ரித்விகா ஜோடிக்கு ‘தீபாவளி போனஸ்’ தரும் விநியோகஸ்தர் ஜெனீஷ்

 

 

விக்ராந்த் – ரித்விகா ஜோடிக்கு ‘தீபாவளி போனஸ்’ தரும் விநியோகஸ்தர் ஜெனீஷ்

 

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் தாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ, எழுதி இயக்கியிருக்கும் படம், ‘தீபாவளி போனஸ்’.

இதில் விக்ராந்த், ரித்விகா இருவரும் ஜோடியாக இணைந்துள்ளனர்..

இப்படத்தை ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார்.. இவர் தொடர்ந்து முகவரி இல்லாத சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஆதரவு கொடுத்து விநியோகம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

இயக்குநர் ஜெயபால், உலக மாணவர்கள் கீதம் என்ற தலைப்பில் சுமார் 78 நாடுகளில் யுனஸ்கோ அமைப்பால் ஒளிபரப்பப்படும் பாடலை இயக்கியிருப்பவர்..

இந்த படம் பற்றி இயக்குநர் ஜெயபால் கூறுகையில்…

‘தீபாவளி பண்டிகை வருவதற்கு மூன்று நாட்கள் இருக்கும் போது தொடங்கும் கதை, தீபாவளி பண்டிகையின் போது முடிவடையும். ஒரு நடுத்தர குடும்பம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு எப்படி தயராகிறார்கள் என்பதை வாழ்வியலாக சொல்லி இருக்கிறோம்..

’9 திருடர்கள்’, ‘பேய்கள் ஜாக்கிரதை’ போன்ற படங்களுக்கு இசையமைத்த மரிய ஜெரால்டு படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.. கௌதம் சேதுராமன் ஒளிப்பதிவு செய்ய பார்த்தி முருகன் எடிட்டிங் செய்துள்ளார்.

பாடல்களை மகா என்பவர் எழுத கலைப்பணிகளை அருண் மேற்கொண்டுள்ளார்.. மக்கள் தொடர்பு பணிகளை தர்மதுரை மற்றும் சுரேஷ் சுகு செய்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் ஒரு பாடல் பாடல், அந்தோணி தாசன் ஒரு பாடல் பாடியிருக்கிறார்கள். பாடகி அக்‌ஷரா ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

மூன்று பாடல்களும் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தின் பின்னணி இசை நிச்சயம் பேசப்படும்..

இளையராஜா & ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் தங்களது பணிகளை மேற்கொள்ளும் ஹங்கேரியில் உள்ள புத்தாபெஸ்ட் ஸ்டுடியோவில் ‘தீபாவளி போனஸ்’ படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு தீபாவளி போனஸ் ஆக அக்டோபர் 25ஆம் தேதி திரையில் வெளியாகிறது.

Jenish releases Deepavali Bonus on 25th October

 

This Diwali, Embrace the Beauty of Joy & Emotions with Feel-Good Entertainer #DeepavaliBonusFromOct25

👉 https://youtu.be/1wkvILavTP8

@vikranth_offl @Riythvika
#DeepakKumarTala @JeyabalJB @ActionJe @maria_jerald @GauthamKs0789 @parthivmurugan @ProDharmadurai @divomusicindia

———