வியட்நாமிலும் இசை வீடு கட்டிய சாம் சி.எஸ்..; பர்த்டே பார்ட்டியில் செஞ்சுரி செலிப்ரேஷன்!
வியட்நாமிலும் இசை வீடு கட்டிய சாம் சி.எஸ்..; பர்த்டே பார்ட்டியில் செஞ்சுரி செலிப்ரேஷன்!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சாம் சி எஸ்.. இளையராஜா ரகுமான் யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கு பிறகு பின்னணி இசை அமைப்பதில் சாம் -+க்கு ஒரு தனி இடம் உண்டு..
தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்த போதிலும் வியட்நாமீஷ் (வியட்நாம் நாட்டின் மொழி) அங்கும் ஒரு படத்திற்கு இவர் இசையமைத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்..
புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன் & விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘விக்ரம் வேதா’ படத்தில் இவரது பாடல்களும் பின்னணி இசையும் இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது..
இவர் இன்று ஜூலை 30ஆம் தேதி தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார்.. இதனை முன்னிட்டு நேற்று ஜூலை 29ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தார்..
அப்போது அவர் பேசும் போது…
2010 ஆம் ஆண்டு என் இசை பயணத்தை திரையுலகில் தொடங்கினேன்.. இந்த 16 ஆண்டுகளில் இதுவரை 100 படங்களை கடந்து விட்டேன்.. முன்பெல்லாம் ஃப்ரீயாக இருந்தேன்.. எப்போது பட வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்தேன்.. தற்போது நிறைய படங்கள் வந்து நான் பிஸியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது..
படத்தில் நாயகனாக நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.. ஆனால் இப்போது நடிப்பு விட இசைக்கி முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். இசையில் ஒரு தனி யிடம் வேண்டும் என்பதற்காக முயற்சித்து வருகிறேன்..

அம்புலி படத்தில் என் இசை பயணத்தை தொடங்கினேன் தற்போது சர்தார் 2 எனது நூறாவது படம்… 100 படங்களின் கடந்து 10 படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்..
விரைவில் எனக்கான ஒரு இசை விழா நடைபெற உள்ளது.. ஆகஸ்ட் மாதத்தில் என்னுடன் பணியாற்ற இசை கலைஞர்கள் பாடகர் பாடல் ஆசிரியர்கள் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் ஆகியோரின் ஒரு பிரம்மாண்ட விழா நடைபெற உள்ளது..
விரைவில் உங்களை மீண்டும் சந்திப்பேன்.. நீங்கள் இல்லாமல் நான் இல்லை.. என் வளர்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் மீடியாக்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். எனவே உங்களுடைய அன்புக்கும் ஆசிக்கும் நன்றி.. ” என பேசினார் சாம் CS.
Music conposer SAM Cs hits 100 movies and Celebrates his birthday

