‘அட்ரஸ்’ இழந்த கிராமத்துக் கதையை சொல்ல செப்டம்பரில் வரும் அதர்வா
‘அட்ரஸ்’ இழந்த கிராமத்துக் கதையை சொல்ல செப்டம்பரில் வரும் அதர்வா
ராஜமோகன் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘அட்ரஸ்’..
‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜமோகன் ஆவார்.
அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழக–கேரள எல்லைப் பகுதியில் அமைந்திருந்த ஒரு கிராமம் தனது அதிகாரப்பூர்வ முகவரியையே (அட்ரஸ்) இழந்த சம்பவத்தை கொண்ட கதைக்களம் இது..
இதில் நடிகர் அதர்வா முரளி, ‘காளி’ என்ற இளைஞராக நடித்துள்ளார். ஜோடியாக பூஜா ஜாவேரி நடித்துள்ளார். இவர்களுடன் , தம்பி ராமையா, தேவதர்ஷினி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்..
இந்த நிலையில், ‘அட்ரஸ்’ படத்தின் ரிலீஸ் மாதம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.. ஆனால் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை..
Atharvaa and Pooja starring Address release updates

