Lollipop Sports Academy ஹீரோவாகும் ரெடின் கிங்ஸ்ஸி.; ரக்ஷிதா & யாஷிகா கூட்டணி

Lollipop Sports Academy ஹீரோவாகும் ரெடின் கிங்ஸ்ஸி.; ரக்ஷிதா & யாஷிகா கூட்டணி

 

Lollipop Sports Academy ஹீரோவாகும் ரெடின் கிங்ஸ்ஸி.; ரக்ஷிதா & யாஷிகா கூட்டணி.?

 

கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், யோகி பாபு, சதீஷ், சூரி உள்ளிட்ட காமெடி நடிகர்கள் பலரும் நடித்து வருகின்றனர்..

இவர்கள் கதையின் நாயகனாக மாறிவிட்டதால் தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் காமெடிக்கு பஞ்சம்.. இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே காமெடி நடிகர்களாக தொடர்ந்து நடித்து வந்தார்கள்.

தற்போது காமெடி நடிகராக அடையாளம் காணப்பட்டு ரெடின் கிங்ஸ்ஸி கதாநாயகனாக மாறியிருக்கிறார்..

Lollipop Sports Academy லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அவதாரம் எடுக்கிறார்.. இந்த பட பூஜை இன்று ஜூன் 26 ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது..

KR செந்தில்நாதன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.. ஸ்ரீதர் பட்டாபி ஒளிப்பதிவு செய்ய அச்சு ராஜா மணி இசையமைக்கிறார்.. எஸ்பி அகமது எடிட்டிங் பணிகளை கவனிக்க ரெம்பும் பால்ராஜ் கலைப்பணிகளை கவனிக்கிறார்.. மக்கள் தொடர்பாளராக சேலம் சரண் பணியாற்றுகிறார்..

இந்த படத்தில் ரக்ஷிதா மகாலட்சுமி, அமித் பார்க்கவ், யாஷிகா ஆனந்த், அஸ்மிதா, மதுவந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்..

காவியா ப்ரொடக்ஷன் சார்பாக மஞ்சுநாத்தை படத்தை தயாரிக்கிறார்..

 

Lollipop Sports Academy movie Shooting starts with Pooja

 

Related articles