ஆரி அர்ஜூனன் நடிக்கும் ‘பகவான்’ ட்ரைலர் அப்டேட்..; முக்கிய வேடத்தில் பல்லி..?!

ஆரி அர்ஜூனன் நடிக்கும் ‘பகவான்’ ட்ரைலர் அப்டேட்..; முக்கிய வேடத்தில் பல்லி..?!

 

 

ஆரி அர்ஜூனன் நடிக்கும் ‘பகவான்’ ட்ரைலர் அப்டேட்..; முக்கிய வேடத்தில் பல்லி..?!

 

நடிகராக புகழ் பெற்றாலும் சமூக சேவைகளில் ஈடுபட்டு அது தன்னுடைய அடையாளமாக மாற்றி வருபவர் நடிகர் ஆரி அர்ஜுனன்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வின்னராக வெற்றி பெற்ற போது தமிழக ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்..

ஆரி தற்போது சேரன் இயக்கத்தில் டாக்டர் ராமதாசின் வாழ்க்கையை மையப்படுத்தும் ‘அய்யா’ படத்தில் நடித்து வருகிறார்.

இத்துடன் மகாபாரத கதையுடன் தொடர்புடைய புராண கால கதையான பகவான் படத்திலும் நடித்து வருகிறார்.

மித்​தாலஜிகல் திரில்​ல​ராக உரு​வாகி​யுள்ள இப்படத்தை சு.​காளிங்​கன் இயக்​கி​யுள்​ளார்.

அம்​மன்யா மூவிஸ் நிறு​வனம் சார்​பில் சி.​வி. மஞ்​சு​நாதா தயாரித்துள்ள இதில் ஆரி அர்​ஜுனன், பூஜிதா பொன்​னா​டா, ஜேம்ஸ் பார்​ரெட், சந்​தோஷ் பிர​தாப், யோக் ஜேபி, ஆடு​களம் முருக​தாஸ் ஆகியோர் நடித்​துள்​ளனர்.

நம் இல்லங்களில் சா​தாரண உயி​ரின​மான பார்க்கப்படும் பல்லி நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

முரு​கன் சரவணன் ஒளிப்பதிவு செய்​துள்ள இப்​படத்​தின் பாடல்​களுக்கு ப்ரசன் பாலாவும் பின்​னணிக்கு யுவ​ராஜும் இசை அமைத்​துள்​ளனர்..

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் ஆறு வருடங்களுக்கு முன்பு கடந்த 2020இல் வெளியானது குறிப்பிடத்தக்கது..

ஆரி அர்ஜுனனின் ‘பக​வான்’படத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டனர்..

இந்த நிலையில் பகவான் படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் 17ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது..

 

Aari Arjunan Starrer Bhagavan Audio update

—-

 

 

 

Related articles