ஜூன் 12ல் ரிலீசாகும்.. ஆட்டி – சாருகேசி – டபுள் ஆக்குபன்சி – ஹபீபி – மூன்றாம் கண் – வள்ளுவன் படங்கள் ஒரு பார்வை
ஜூன் 12ல் ரிலீசாகும்.. ஆட்டி – சாருகேசி – டபுள் ஆக்குபன்சி – ஹபீபி – மூன்றாம் கண் – வள்ளுவன் படங்கள் ஒரு பார்வை
2026 கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் இந்த இரண்டு மாதங்களும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மிகவும் பரபரப்பாக இருந்தன..
தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் விஜய் அரசியலில் களம் கண்டு அவரே தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றதால் அந்த பரபரப்பில் இரண்டு மாதங்களும் உருண்டோடி விட்டன
எனவே தமிழ் சினிமாவில் போதுமான படங்கள் இறங்கவில்லை.. தனுஷின் கர சூர்யாவின் கருப்பு உள்ளிட்ட சில ஒரு சில பெரிய நடிகரின் படங்கள் மட்டுமே இறங்கியது..
இந்த நிலையில் தற்போது ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் முதல் வாரத்திலும் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை..
பரிமளா அண்ட் கோ மட்டுமே எல்லாரும் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது.. மற்ற படங்கள் இரட்டையர், சம்ஹாரம், சன்னிதானம் உள்ளிட்ட படங்கள் பத்திரிக்கையாளர்களில் கூட ஒரு சிலருக்கு மட்டுமே திரையிட்டு காண்பிக்கப்பட்டது..
இதனால் மீடியாவில் உள்ளவர்களுக்கு மற்ற படங்கள் வெளியானதா என்பது கூட தெரியாது..
தற்போது இந்த வாரம் ஜூன் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால் அதிரடியாக எட்டு தமிழ் படங்கள் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளன..
“ஆட்டி, சாருகேசி, டபுள் ஆக்குபன்சி, ஹபீபி, மூன்றாம் கண், நிழல், வள்ளுவன், வருகை பதிவேடு” ஆகிய 8 படங்கள் வெளியாக உள்ளன..
அந்தப் படங்கள் பற்றி ஒரு பார்வை…
மீரா கதிரவன் புதுமுகங்கள் நடிக்கும் ‘ஹபீபி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும், ஈஷா எம்,மாளவிகா மனோஜ்,தனஸ்ரீ, சுதாகரன், அனுஸ்ரீயா ராஜன், இஸ்மத் பானுரேகா உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர்.
நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளனர்.. மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
www.rightnewsraja.com
அறிமுக இயக்குனர் சகோ கணேசன் இயக்கியுள்ள திரைப்படம் ‘மூன்றாம் கண்’.
இதில் விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் நடித்துள்ளனர்.
ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே. சசிகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இசையமைத்துள்ளார்.
என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் பிரதாப் பின்னணி இசை அமைத்துள்ளார்.. ஹைபர்லிங்க் கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது..
www.rightnewsraja.com
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’… தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா நாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி ஆட்டி உருவாகியுள்ளது…
www.rightnewsraja.com
சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் சாருகேசி.
‘சாருகேசி’ என்ற நாடகக் கதையை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது… இந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ரஜினி கேட்டுக் கொண்டதால் திரைப்படமாக உருவானதாகவும் கூறப்படுகிறது..
ஒய்.ஜி. மகேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.. தற்போது இந்தப் படக் குழுவினர் தீவிர ப்ரொமோஷன் பணிகளை ஈடுபட்டு வருகின்றனர்..
அருண். ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். வசனம், பாடல்களை பா. விஜய் எழுதியுள்ளார். தேவா இசையமைத்துள்ளார்.
—
அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கியுள்ள படம், ‘டபுள் ஆக்குபன்சி’.
இந்தப் படத்தை குஷ்பூ – சுந்தர் சி தம்பதிகளின் மகள் தயாரித்துள்ளார்.
சாம் சி.எஸ் இசை அமைக்கும் இப்படத்துக்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதில் சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர். அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன..
www.rightnewsraja.com
இயக்குநர் சங்கர் சாரதி இயக்கத்தில், சேத்தன் சீனு மற்றும் ஆஷ்னா ஜாவேரி நடிப்பில் உருவாகியுள்ள ‘வள்ளுவன்’.
ஒரு சமூக அதிரடி (Social Action Thriller) திரைப்படமாகும். ஆறுபடை புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷைல் குமார் ராஜேந்திரன் தயாரித்துள்ளனர்.
சேத்தன் சீனு, ஆஷ்னா ஜாவேரி, மறைந்த நடிகர் மனோபாலா, சாய் தீனா, பிரேம்குமார்.. இசை: அஸ்வத்.
தயாரிப்பு: ஆறுபடை புரொடக்ஷன்ஸ் (ஷைல் குமார் ராஜேந்திரன்).
ஏ.கே.குமார் இயக்கத்தில் ஜனனி குணசீலன், கௌஷிக் கோபாலன் நடித்துள்ள படம் ‘நிழல்’.
முக்கிய வேடங்களில் ஸ்ரீ விசாகன் மற்றும் திவ்யா கிருஷ்ணன் நடித்துள்ளனர்..
அபூபக்கர் என்பவர் இசையமைத்துள்ளார்.. ஏகே மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது..
தரம்யா – சரண்யா என்ற இரட்டையர்களின் வாழ்க்கையில் நடக்கும் கொடூரமான தாக்குதலையும், பழிவாங்கலையும் மையமாகக் கொண்டுள்ளது..
மேலும் காதல் & கடமை போராட்டத்தை பேசும் படமாக நிழல் உருவாகியுள்ளது. இந்த படமும் ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
2026 June 12 Tamil movies release updates

