பவன் பர்த்டே ட்ரீட்..; ‘சேயோன்’ குழுவினருடன் ஷேர் செய்த சிவகார்த்திகேயன்
பவன் பர்த்டே ட்ரீட்..; ‘சேயோன்’ குழுவினருடன் ஷேர் செய்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தயாரித்த தாய்க்கிழவி படத்தை இயக்கியவர் சிவக்குமார் முருகேசன்.
இவரது இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் ‘சேயோன்’ இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கமலஹாசன் தயாரித்து வருகிறார்.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படத்தை தயாரித்தவர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது… தற்போது இவர்கள் கூட்டணியில் இரண்டாவது படம் உருவாகி வருகிறது..
இந்தப் படத்தில் நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்து வருகிறார்.. பால சரவணன் முக்கிய வேடத்தில் நடிக்க மதுரை மண் சார்ந்த கதையாக படம் உருவாகி வருகிறது..

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் தனது மகன் பவனின் பிறந்தநாளை சிவகார்த்திகேயன் கொண்டாடி உள்ளார்.. படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து தன் கைப்பட பரிமாறி ஆனந்தத்தை ஷேர் செய்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
Sivakarthikeyan celebrated his Son birthday at Seyon shooting spot

