மீண்டும் கோலிவுட்டில் இளையராஜா சாம்ராஜ்யம்..; 3 பிரபல இயக்குனர்களுடன் கூட்டணி

மீண்டும் கோலிவுட்டில் இளையராஜா சாம்ராஜ்யம்..; 3 பிரபல இயக்குனர்களுடன் கூட்டணி

 

மீண்டும் கோலிவுட்டில் இளையராஜா சாம்ராஜ்யம்..; 3 பிரபல இயக்குனர்களுடன் கூட்டணி

 

இசைஞானி இளையராஜா நாளை ஜூன் இரண்டாம் தேதி தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார்.. இந்திய திரை உலகில் ஏன் உலக அளவில் கூட இசையில் இவர் சாதிக்காத சாதனைகள் இல்லை என்று சொல்லலாம்..

உலக அளவில் சிம்பொனிக்காக பெயர் பெற்றவர் நம் இசைஞானி இளையராஜா என்று சொன்னால் அது மிகையல்ல.

இவர் இசையில் இதுவரை 1540 படங்களை கடந்துவிட்டார்.. ஆனால் இன்றும் இசை உலக இசை ராம் சாம்ராஜ்யத்தை கடந்த 50 வருடங்களாக அன்னக்கிளி முதல் தொடங்கி இன்று வரை நடத்திக் கொண்டிருக்கிறார்..

கலந்த சில வருடங்களாக ஆண்டுக்கு சில படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டு இசையமைத்து வந்தார் இளையராஜா..

தற்போது மீண்டும் தன்னுடைய இசையில் புதிய வேகத்தை எடுத்துள்ளார் என்றே தோன்றுகிறது.. காரணம் தமிழ் சினிமாவில் மூன்று பிரபலமான இயக்குனர்கள் உடன் கைகோர்த்துள்ளார்..

இந்த மூன்று படங்களும் தற்போது இளையராஜா இசையில் உருவாகிறது.. அதன் விவரம் இதோ

தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் ‘பாக்கெட் நாவல்’, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் 10வது படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று அறிவிக்கப்பட்ட ‘மஞ்சணத்தி’ ஆகிய படங்களுக்கு இளையராஜா தான் இசை..

 

ilaiyaraja music for Karthik Subbaraj and Mari Selvaraj movies