Leader in OTT ; தியேட்டரில் மாஸ் காட்டிய லெஜெண்ட் சரவணன் இப்போ ஓடிடி-க்கு வருகிறார்
Leader in OTT ; தியேட்டரில் மாஸ் காட்டிய லெஜெண்ட் சரவணன் இப்போ ஓடிடி-க்கு வருகிறார்
பிரபல தொழில் அதிபர் சரவணா ஸ்டோர்ஸ் லெஜென்ட் சரவணன் திரையில் அறிமுகமானார்.. இவரின் முதல் படம் ‘லெஜன்ட்’.. ஆனால் படத்தில் இருந்த பிரம்மாண்டம் இவரது நடிப்பிலும் கதையிலும் இல்லை.. இதனால் பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தார்.
ஆனால் எவரும் எதிர்பாராத வகையில் தனது 2வது படத்தில் முற்றிலுமாக தன்னை ஒரு நடிகராக மெருகேற்றி ‘லீடர்’ என்ற படத்தில் நடித்தார்..
இந்த படம் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றது.. மேலும் படத்தின் திரைக்கதையும் பிரம்மாண்டமும் ரசிகர்களை மிரள வைத்தது எனலாம்..
இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணன் தன்னுடைய சரவணா ஸ்டோர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் மிகப் பிரமாண்டமாக தயாரித்திருந்தார்..
துரை செந்தில்குமார் இயக்கிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.. பாடல்களும் மிரட்டலான பின்னணி இசை வெற்றிக்கு பெரிய பலமாக அமைந்திருந்தது..
சந்தோஷ் பிரதாப் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.. மேலும் முக்கிய வேடங்களில் ஆண்ட்ரியா & ஷாம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்..
இந்த நிலையில், லீடர் திரைப்படம் வரும் மே 29 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Legend Saravanans Leader movie OTT release date 29 May
Get ready to witness #Leader streaming from May 29 on @PrimeVideoIN ❤️🔥
Available in Tamil, Telugu, Malayalam & Kannada ✨
@thelegendoffl #LegendSaravanan #லீடர் ❤️🔥

