கருப்பசாமி பாட்டு என் அசிஸ்டன்ட் சொன்னாரு.. இப்படியொரு ரெஸ்பான்ஸ் எதிர்பார்க்கல.. – சூர்யா

கருப்பசாமி பாட்டு என் அசிஸ்டன்ட் சொன்னாரு.. இப்படியொரு ரெஸ்பான்ஸ் எதிர்பார்க்கல.. – சூர்யா

 

கருப்பசாமி பாட்டு என் அசிஸ்டன்ட் சொன்னாரு.. இப்படியொரு ரெஸ்பான்ஸ் எதிர்பார்க்கல.. – சூர்யா

 

சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி, நட்டி தீபா,  உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கருப்பு’. ஆர் ஜே பாலாஜி இயக்கிய இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படம் கடந்த மே மாதம் 15ஆம் தேதி வெளியானது..

இப்​படம் உலகம் முழு​வதும் இது​வரை ரூ.207 கோடிக்​கும் அதிகமாக வசூலித்​துள்​ளது. தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது..

இப்​படம் வெற்​றிகர​மாக ஓடிக் கொண்​டிருப்பதை அடுத்து, செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​தார் நடிகர் சூர்யா.

அப்​போது அவர் பேசும்போது…: ‘கருப்​பு’ படத்தை அரை மணி நேரத்தில் முடிவு பண்​ணினேன், இதில் நடிக்கலாம் என்​று. வேறு எந்​தப் படத்​தை​யும் இவ்​வளவு விரை​வாக முடிவு பண்ணியதில்லை.

ஆர்ஜே பாலாஜி கதை சொல்​லும்​போது, தியேட்​டரில் வேறு மாதிரி இருக்​கும் என்ற நம்​பிக்கை இருந்​தது.

இது ஆசைப்​பட்ட வெற்​றி. ஆனால், எதிர்​பார்க்​காத பெரிய வெற்றியைக் கொடுத்த ரசிகர்​களுக்கு நன்​றி.

இது மாதிரி​யான ரியாக்ஷனை தியேட்​டரில் சமீபத்​தில் பார்த்ததே இல்​லை. கடவுளின் அருள் இந்​தப் படத்​தில் இருக்​கிறது என்​பதை உணர்​கிறோம்.

தமிழ்​நாடு மட்டுமின்​றி, ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, துபாய் என எங்கும் இதே ரியாக் ஷன் கிடைக்​கிறது என்​பதை நினைக்​கும்​போது இந்​தத் தொழில் பண்​ணுவது பிடித்​திருக்​கிறது என்று மறுபடி​யும் சொல்​லத் தோன்​றுகிறது.

எல்லாம் படத்​துக்​கும் விமர்​சனம் இருக்​கும், இதை இப்​படிப் பண்ணியிருக்​கலாம், அப்​படி பண்​ணி​யிருக்​கலாம் என்​று. ஆனால் எல்​லோரிடம் இருந்​தும் ஒரே மாதிரி​யான அன்பை​யும் அவர்​களுக்கு சந்​தோஷத்​தை​யும் ஒரு படம் கொடுக்​கிறது என்றால் அதற்காக நான் நன்றி சொல்ல வேண்​டும்.

என்​னுடன் 27 வருட​மாக உதவி​யாள​ராக இருக்​கும் குமார் சொன்ன ஒரு விஷ​யம், படத்தைத் தாண்டி கருப்​ப​சாமிக்கு ஒரு பாடல் வைக்க வேண்​டும் என்​பது.

குமாரின் ஐடி​யா​தான் அந்த கிளை​மாக்ஸ் பாடல். எடிட் செய்து முடித்த பிறகு 5 மாதத்​துக்​குப் பிறகு எடுத்​தது​தான், அப்​பாடல். படத்​துக்கு இனி செலவு பண்ண வேண்​டாம், இனி முடி​யாது என்று நினைத்து
அந்த ஐடி​யாவை முடித்​திருக்கலாம்.

ஆனால், எடுத்​து​விடலாம் என முடிவு செய்து அப்​பாடலை ஷூட் செய்​தோம். அதற்காக அதற்காக தயாரிப்பாளர்களுக்கு நன்றி.. அதைத்​தான் இப்​போது ரசிகர்​கள் பாராட்டுகிறார்கள்.

குழந்​தைகளில் இருந்து பெரிய​வர்​கள் வரை தியேட்​டர்களில் அத்​தனை பேரும் படத்தை ரசிக்​கிறார்​கள்.. மீடியா மக்களுக்கு நன்றி”

இவ்வாறு நடிகர் சூர்யா கூறி​னார்.

தயாரிப்​பாளர்​கள் எஸ்.ஆர்.பிரபு, பிர​காஷ் ​பாபு, 2 டி என்​டர்​டெ​யின் மென்ட் நிறுவனத்​தின் ராஜ சேகர ​பாண்​டியன் மற்றும் பிஆர்ஓ சதீஷ் & சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்..

 

Suriya and team happy with Karuppu success