நாவல் படிக்கும் உணர்வை திரையில் தருபவர் காந்தி கிருஷ்ணா…; – BREAK FAST குறித்து ஜி.வி. பிரகாஷ்
நாவல் படிக்கும் உணர்வை திரையில் தருபவர் காந்தி கிருஷ்ணா…; – BREAK FAST குறித்து ஜி.வி. பிரகாஷ்
பன்முகத் திறமையும் தொடர் வெற்றிகளும்தான் திரைத்துறையில் ஒருவர் நீடித்து நிலைக்க முக்கிய காரணம். அந்த வகையில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். பல மொழிகளிலும் பல்வேறு வகை படங்களிலும் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ஜிவி பிரகாஷ், இயக்குநர் காந்தி கிருஷ்ணாவுடன் மீண்டும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் இணைந்திருக்கிறார்..
இதற்கு முன்பு இவர்கள் இணைந்து பணிபுரிந்த ‘ஆனந்த தாண்டவம்’ படத்திற்குப் பிறகு தற்போது இவர்கள் இணைந்திருக்கும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்து கொண்டதாவது, “காந்தி கிருஷ்ணா சாருடன் மீண்டும் இணைந்து பணிபுரிந்தது ஸ்பெஷலான அனுபவம். ’ஆனந்த தாண்டவம்’ என் வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் வந்த படம். அந்தப் படத்தில் என்னை நம்பி, ரசிகர்களை சென்றடைந்த இசையை உருவாக்க வாய்ப்பு கொடுத்த காந்தி கிருஷ்ணா சாருக்கு நன்றி. இசையமைப்பாளராக ஒரு வலுவான அடித்தளத்தை எனக்கு அமைத்து கொடுத்த படங்களில் அது முக்கியமானது. மனித உறவுகளை அவர் படங்களில் அணுகும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆழமும், நுணுக்கமும், நேர்மையும் கலந்த அந்த அணுகுமுறையால் அவரது படங்களை ஒரு நாவலை திரையில் காண்பது போல உணர வைக்கும்..

ஒவ்வொரு கதாபாத்திரமும் சொல்லாத ஒரு கதையை பல உணர்வுகளுடன் தன்னுள்ளே மறைத்து வைத்திருக்கும். ‘பிரேக்ஃபாஸ்ட்’ அப்படியான ஒரு படம். இன்றைய காலத்தில் உறவுகளின் சிக்கல்களையும், மனிதர்களின் உணர்வுகளை பற்றியும் இந்தப் படம் திரையில் பேசும். இந்தப் படத்திற்கு இசை அமைக்கும் போது, கதை ஓட்டத்துடன் இயல்பாக கலந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது காட்சிகளை மீறி ஒலிக்காமல், கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பயணித்து, அவர்களின் உணர்வுகளை உயர்த்த வேண்டும் என்பதே என் நோக்கம்..
இந்தப் படத்தின் பாடல்கள் திரையைத் தாண்டியும் ரசிகர்களிடம் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். படத்தை பெரிய திரையில் ரசிகர்களுடன் காண ஆவலாக உள்ளேன்” என்றார்..
*நடிகர்கள்:* ராணவ், ரோஸ்மின், சம்பத் ராஜ், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் மற்றும் பலர்.
*தொழில்நுட்பக்குழு விவரம்:*
தயாரிப்பாளர்: கிரிஜா வரதராஜ்,
இயக்குநர்: காந்தி கிருஷ்ணா,
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,
பாடல் வரிகள்: வைரமுத்து மற்றும் விவேக்,
தமிழ்நாடு திரையரங்க விநியோகஸ்தர்: குகன்
உலகம் முழுவதும் ஏப்ரல் 24 அன்று ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
Gv Prakash speaks about Break fast movie and Gandhi Krishna

