உடன் பிறந்தவர்களின் வாழ்க்கைத் தேர்வுகள்..; போஸ் வெங்கட் நடிக்கும் Brothers And Sisters வெப் சீரிஸ்

உடன் பிறந்தவர்களின் வாழ்க்கைத் தேர்வுகள்..; போஸ் வெங்கட் நடிக்கும் Brothers And Sisters வெப் சீரிஸ்

உடன் பிறந்தவர்களின் வாழ்க்கைத் தேர்வுகள்..; போஸ் வெங்கட் நடிக்கும் Brothers And Sisters வெப் சீரிஸ்

 

 

 

‘உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்

 

 

மே மாதம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ப்ரீமியர் ஆகவுள்ள புதிய ஃபேமிலி வெப் சீரிஸான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது..

 

ஜியோஹாட்ஸ்டாரில் இதற்கு முன்பு வெளியாகி வரவேற்பு பெற்ற ‘உப்பு புளி காரம்’ தொடரின் தயாரிப்பு குழுவிடமிருந்து வரும் இந்த புதிய தொடர், நவீன குடும்ப உறவுகளை புதுமையாகவும் ஈர்க்கக்கூடிய வகையிலும் சொல்லியிருக்கிறது..

நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் நெருக்கத்தை இணைக்கும் இந்தக் கதையில் நான்கு உடன்பிறந்தவர்களின் தனித்தனி தொழில், குணநலன் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளை சமாளிக்கும் விதத்தையும், குடும்ப பிணைப்பால் ஒன்றிணைந்திருக்கும் உறவுகளையும் மையமாகக் கொண்டுள்ளது.

இந்தத் தொடரில் போஸ் வெங்கட் மற்றும் காயத்ரி சாஸ்த்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம் நடத்தி வரும் போஸ் வெங்கட் கட்டுப்பாடான குடும்ப தலைவர். குடும்பத்தை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் அமைதியான இல்லத்தரசியாக காயத்ரி சாஸ்த்ரி நடித்துள்ளார். மேலும் ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலரும் இந்தத் தொடரில் நடித்துள்ளனர்.

100 அத்தியாயங்களைக் கொண்ட இந்த வெப்சீரிஸை ‘உப்பு புளி காரம்’, ‘போலீஸ் போலீஸ்’ போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார். மென்மையான உணர்வுகள், நகைச்சுவை என அனைத்து தரப்பினரும் தொடர்புபடுத்திக் கொள்ளும்படி இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரின் எபிசோட் வெளியாகும். குடும்ப மதிப்புகள் மற்றும் சமகால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இத்தொடர், பார்வையாளர்களுக்கு ஆழமான மற்றும் விறுவிறுப்பான கதையை வழங்க இருக்கிறது.

தொடரின் கதாபாத்திரங்கள், ஈர்க்கக்கூடிய கதை சொல்லல் என ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடர் ஜியோஹாட்ஸ்டாரின் அசல் உள்ளடக்கங்களில் மற்றுமொரு புதிய வரவு.

இந்த வருடம், மே மாதம் முதல் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடர் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும்..

 

Bose Venkat in Brothers and Sisters web series in Jio hotstar