‘மெய்யழகன்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்.. பிரியத்துடன் பிரேம்குமார் விளக்கம்

‘மெய்யழகன்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்.. பிரியத்துடன் பிரேம்குமார் விளக்கம்

 

 

‘மெய்யழகன்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்.. பிரியத்துடன் பிரேம்குமார் விளக்கம்

 

96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் இயக்கிய 2வது படம் மெய்யழகன்.

சூர்யா தயாரிப்பில் கார்த்தி, அரவிந்தசாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரன், இளவரசு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மெய்யழகன் படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியானது.

96 பட புகழ் கோவிந்து வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ஊரை விட்டு பட்டினத்திற்கு சென்ற ஒரு மனிதரின் ஊர் பாசத்தை பேரன்பின் பெருமையை இந்த படம் சொன்னது.. ஆனால் இந்த படத்தின் நீளம் பெறும் குறையாக கருதப்பட்டது.. படத்தின் நீளத்தை குறைக்கலாம் என பல சமூக வலைத்தளங்களில் குரல்கள் எழுந்தன.

அதன்படி நீளம் குறைக்கப்பட்டு தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பு முழு திரைப்படத்தின் கால அளவு 2 மணி நேரம் 57 நிமிடங்களாக இருந்தது. தற்போது 2 மணி நேரம் 38 நிமிடத்திற்கு படத்தை குறைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் நீளம் குறைக்கப்பட்டது குறித்து பிரியத்துடன் இயக்குனர் பிரேம்குமார் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.. அந்த கடிதத்தில்..

அன்பால் உருவான மெய்யழகனுக்கு பேரன்பை அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. திரைமொழியின் வழக்கமான பாணியில் இருந்து விலகிய ஒரு திரை அனுபவத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை விதைத்ததற்கு நன்றி. ஏராளமான அனுபவ பகிர்வுகள் இந்த படைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன.

மெய்யழகனை உணர்ந்து புரிந்துகொண்ட பெரும்பாலானோரின் அன்பும், ரசனையும் பிரமிக்க வைக்கின்றன. படத்தின் நீளம் குறித்து மட்டும் சில அக்கறை குரல்கள் வெளிப்பட்டு வந்த நிலையில், ஒரு படைப்பாளியின் முதல் கடமை மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது.

எல்லோரது திருப்தியும் எனக்கு முக்கியம். அதுவே மெய்யழகனின் மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு நான் செய்யும் கைம்மாறு.

எனவே இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை.

சூர்யா அண்ணா, கார்த்தி ப்ரதர், ராஜசேகர் சார், சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்தி அண்ணா என அனைவரும், முதல் சந்திப்பு முதல் இன்று வரை என்னை அரவணைத்து, முழு படைப்பு சுதந்திரம் அளித்திருக்கிறார்கள். எல்லா சூழலிலும் பக்கபலமாக துணை நிற்கிறார்கள். இப்போதும் இந்த நேரக் குறைப்பு செய்யும், என் முடிவிற்கு உடன் நிற்கிறார்கள். அவர்களுக்கு என் பேரன்பும் நன்றியும்.” என தெரிவித்திருக்கிறார்.

Premkumar letter about Deleted scenes of Meiyazhagan