47 வருடங்களுக்கு முன்பு கமல் – ரஜினி இணைந்து நடித்த படங்களின் முழு விவரம்

47 வருடங்களுக்கு முன்பு கமல் – ரஜினி இணைந்து நடித்த படங்களின் முழு விவரம்

47 வருடங்களுக்கு முன்பு கமல் – ரஜினி இணைந்து நடித்த படங்களின் முழு விவரம்

 

1975 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக ரஜினிகாந்த் அறிமுகமானார்.. கே பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தில் தான் ரஜினிகாந்த் அறிமுகம் செய்யப்பட்டார்.

அபூர்வ ராகங்கள் (1975)

இந்தப் படத்தில் வில்லனாக ரஜினியும் நாயகனாக கமல் நடித்திருந்தனர்.. இதனைத் தொடர்ந்து சில படங்களை இணைந்து நடித்திருந்தனர்.. அந்த 12 படங்கள் விவரங்கள் இதோ…

மூன்று முடிச்சு (1976)

நண்பர்களான கமல் ரஜினி இருவரும் ஸ்ரீதேவியை காதலிப்பார்கள்.

அவள் அப்படித்தான் (1978)
ருத்ரய்யா இயக்கிய இந்த படத்தில் விளம்பர கம்பெனி நடத்துபவராக ரஜினியும், விளம்பர படம் எடுப்பவராக கமலும் நடித்தனர்..

பதினாறு வயதினிலே (1977)

இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பாரதிராஜா… முதல் படத்திலேயே கமல் ரஜினி ஸ்ரீதேவி ஆகியோரை நடிக்க வைத்தார்.. இன்றளவிலும் இந்த படத்தின் கேரக்டர்கள் பெயர் பெற்று உள்ளது.. ரஜினி பரட்டை என்ற கேரக்டரும் கமல் சப்பானி என்ற கேரக்டரில் ஸ்ரீதேவி மயில் என்ற கேரக்டரும் நடித்திருந்தனர்.. வில்லன் ரஜினி நண்பராக கவுண்டமணி நடித்திருந்தார்.. இசை – இளையராஜா

அவர்கள் (1977)

மீண்டும் பாலசந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடித்தனர்..

ஆடுபுலி ஆட்டம் (1977)

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடித்தனர்.. மகேந்திரன் கதை எழுதியிருந்தார்..

இளமை ஊஞ்சலாடுகிறது (1978)

இளையராஜா இசையமைக்க ஸ்ரீதர் இந்த படத்தை இயக்கியிருந்தார்.. இதில் ரஜினியும் கமலும் இணைந்து நடித்திருந்தனர்..

நினைத்தாலே இனிக்கும் (1979)

மீண்டும் கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் ரஜினி – இணைந்து நடித்திருந்தனர்.. எம் எஸ் விஸ்வநாதன் இசையமைக்க கதை எழுதி இருந்தார் சுஜாதா..

அலாவுதீனும் அற்புத விளக்கும் (1979)

ஐ வி சசி ஏகே இந்த படத்தில் கமல்ஹாசனும் ரஜினிகாந்த் இணைந்து நடித்திருந்தனர்..

தப்பு தாளங்கள் மற்றும் தில்லுமுல்லு.. இதில் கிட்டத்தட்ட கௌரவ வேடத்தில் நடித்தனர்.. மேலும் கமல்ஹாசனின் தாய் இல்லாமல் நானில்லை படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்தார்..

அமிதாப், கமல்ஹாசன் இணைந்து நடித்த கெராப்தார் என்ற இந்தி படத்தில் நண்பராக கவுரவ வேடத்தில் நடித்தார் ரஜினி..

1978 ஆண்டுக்குப் பிறகு 47 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கின்றனர்.. இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி மகன் இன்பபதி தயாரிக்க நெல்சன் இயக்குகிறார்.. அனிருத் இசை அமைக்கிறார்..

இந்தப் படத்தில் யார் ஹீரோ.? என்ற வாசகத்துடன் ப்ரோமோ வீடியோ வெளியானது.. விரைவில் யார் ஹீரோ என்பதும் படத்தின் டைட்டில் என்ன என்பது வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்க உள்ளார் இயக்குனர் நெல்சன்..

 

Before 47 years Kamal and Rajini acted together Movie list

—-

 

Related articles