ரசிகரின் சேவையை பாராட்டி நேரில் அழைத்து தங்க சங்கிலி பரிசளித்த ரஜினி
ரசிகரின் சேவையை பாராட்டி நேரில் அழைத்து தங்க சங்கிலி பரிசளித்த ரஜினி
நடிகர் ரஜினிகாந்துக்கு தீவிரமான ரசிகர்கள் இருப்பது உலகம் அறிந்ததே.. ரஜினியை கடவுளாக… கோயில் கட்டி வணங்குபவர்களும் உண்டு.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் ஒருவரை அழைத்து அவர் செய்து வரும் சேவையை பாராட்டி தங்க சங்கிலி பரிசளித்துள்ளார்..
அதன் விவரம் இதோ…
மதுரையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் அல்போன்ஸ்.. இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார்.. இவர் தன் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வேலையில் ரூபாய் 5க்கு பரோட்டா விற்று சேவை செய்து வருகிறார்.
இந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி ரஜினியின் கவனத்திற்கு சென்றது.. மேலும் அவர் ரஜினியை பார்க்க விரும்பியதாகவும் கூறப்பட்டது..
இதனை அறிந்த ரஜினிகாந்த் அந்த ரசிகரை அழைத்து அவரது சேவையை பாராட்டி தங்கச் சங்கிலி பரிசளித்துள்ளார்..
மேலும் உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்து தருகிறேன் என்று ரஜினிகாந்த் அவரிடம் தெரிவித்ததாக அவர் பேட்டியில் கூறி இருக்கிறார்..

மேலும் ரஜினியை பார்த்தது தன்னுடைய பாக்கியம் என்றும் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் அல்போன்ஸ்..
அல்போன்ஸ் தனது குடும்பத்துடன் ரஜினியுடன் எடுத்த புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது..
Rajini honoured his fan Alphonse with Gold Chain

