மங்காத்தா முன் ‘திரௌபதி-யால் நிற்க முடியல.. மக்களை நம்பி இருக்கிறேன் என மோகன் ஜீ பதிவு

மங்காத்தா முன் ‘திரௌபதி-யால் நிற்க முடியல.. மக்களை நம்பி இருக்கிறேன் என மோகன் ஜீ பதிவு

மங்காத்தா முன் ‘திரௌபதி-யால் நிற்க முடியல.. மக்களை நம்பி இருக்கிறேன் என மோகன் பதிவு

 

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் மற்றும் ரக்ஷனா இருவரும் ஜோடியாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘திரௌபதி2’. இந்த படம் ஜனவரி 23ஆம் தேதி நேற்று திரையரங்கில் வெளியானது.

இந்த படம் வெளிவதற்கு முன்பு தெறி படம் ஜனவரி 23ல் ரீ – ரிலீஸ் ஆகும் என தாணு தெரிவித்து இருந்தார்.. எனவே அந்த படத்தை ரீ – ரிலீஸ் செய்ய வேண்டாம்.. எங்களுக்கு தியேட்டர் கிடைக்காது என மோகன் தரப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து தாணு தெறி படத்தை ரீ-ரிலீஸ் செய்யவில்லை.. ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்தார்.. இதற்கு படக்குழு சார்பில் நன்றியை தெரிவிக்கப்பட்டது..

ஆனால் அஜித்தின் மங்காத்தா படம் ஜனவரி 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.. தற்போது அஜித் படத்திற்கு நிறைய திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. இது குறித்து மோகன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…


#திரெளபதி2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை.. பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு.. மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது என்ற செய்தியை கொண்டு சேர்க்க முடியவில்லை..

மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை.. மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை..

இந்த சூழலை பயன்படுத்தி, பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும், படம் பார்க்காமல் தவறான கருத்துக்களையும் பரப்பி வருகிறார்கள்.. திரைப்பட துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன்..

மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. எனக்கு மக்களே துணை.. மக்களே முடிவு செய்யட்டும்.. என்றும் உங்களை மட்டுமே நம்பி இருக்கும் உங்கள் மோகன் G..

 

Mohan emotional statement about Draupathi 2 and Mankaatha re release

 

 

 

 

Related articles