சினிமா மைதானத்தில் 3 செஞ்சுரி அடித்த யோகி பாபு..; ‘அர்ஜுனன் பேர் பத்து’ அப்டேட்

சினிமா மைதானத்தில் 3 செஞ்சுரி அடித்த யோகி பாபு..; ‘அர்ஜுனன் பேர் பத்து’ அப்டேட்

 

சினிமா மைதானத்தில் 3 செஞ்சுரி அடித்த யோகி பாபு..; ‘அர்ஜுனன் பேர் பத்து’ அப்டேட்

 

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலரும் ஹீரோக்களாக்கி விட்டனர்..

சந்தானம் வடிவேலு சூரி சதீஷ் உள்ளிட்ட பலரும் இனி காமெடி வேடங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்து விட்டனர்.

ஆனால் யோகி பாபு மட்டும் காமெடி வேடமும் ஓகே கதாநாயகன் வேடமும் ஓகே என்று இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வருகிறார்..

ரஜினி விஜய் அஜித் சிவகார்த்திகேயன் ஷாருக்கான் கிச்சா சுதீப் உள்ளிட்ட பலருடன் இவர் நடித்திருக்கிறார்..

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘மார்க்’ பட விழாவில் யோகி பாபு குறித்து சுதிப் பேசும் போது.. தவணை முறையில் தான் ஷூட்டிங் வருகிறார் யோகி பாபு அவ்வளவு பிஸியாக இருக்கிறார் என்று கூறியிருந்தார்..

அதே சமயம் அவ்வப்போது ஒரு சில படங்களில் கதை நாயகனாகவும் நடித்து வருகிறார்

‘மண்டேலா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் யோகி பாபு.. இந்தப்படம் 2 தேசிய விருதுகளை வென்றது.

இந்த நிலையில், தேவ் சினிமாஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கும் தனது 300-வது படத்தில் நடித்து வருகிறார் யோகிபாபு..

இந்தப் படத்துக்கு ‘அர்ஜுனன் பேர் பத்து’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.. பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

டி.இமான் இசையமைக்கிறார்.. இந்தப் படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், சென்ராயன் உள்ளிட்ட பலரும் யோகி பாபு உடன் நடித்து வருகின்றனர்..

 

Actor Yogi babu completed 300  movies