The Bed விமர்சனம்… Week End Party Warning

The Bed விமர்சனம்… Week End Party Warning

 

The Bed விமர்சனம்… Week End Party Warning

 

ஸ்டோரி…

ஸ்ரீகாந்த் – பிளாக் பாண்டி – விஜே பப்பு – விக்ரம்.. இவர்கள் நால்வரும் சென்னையில் IT துறையில் பணிபுரியும் நண்பர்கள்.. வார விடுமுறையில் எங்கேயாவது ஊர் சுற்றும் கிளம்பி விடுவார்கள்..

4 நாட்கள் தொடர்விடுமுறை இருப்பதால் ஊட்டிக்கு செல்லவிருக்கின்றனர்.. எப்போதும் மதுவுடன் இருக்கும் இவர்கள் இந்த முறை விலைமாதுவை அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு செல்லகின்றனர்..

அதன்படி விலைமாது சிருஷ்டி டாங்கேவை அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு செல்கின்றனர்.. அங்கு முதல் நாள் மது அருந்திவிட்டு ஜாலியாக இருக்கின்றனர்..

இரண்டாவது நாளில் சிருஷ்டி தொலைந்து போகிறார்.. இவர்கள் தேடும் வேளையில் அடுத்த நாள் இவர்களது நண்பர்களில் ஒருவரான விக்ரம் கொல்லப்பட்டு கிடக்குறார்..

அதற்குள் தன்னுடைய மகளைக் காணவில்லை புகார் அளிக்க வருகிறார் சிருஷ்டியின் அம்மா.. அதன் பிறகு நடந்தது என்ன.? சிருஷ்டியை கடத்தியது யார்.? நண்பனனை கொன்றவர் யார்.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்….

ஸ்ரீகாந்த் – சிருஷ்டி டாங்கே.. இருவரும் ஜோடி பொருத்தம் ஓகே.. ஆனால் இவர்களுக்கான ரொமான்ஸ் பெரிதாக இல்லை.. ஆப்பிள் பெண்ணே நீ யாரோ என்ற பாடிய ஸ்ரீகாந்த் கேரக்டர் இதில் வீணடிக்கப்பட்டிருக்கிறது..

சிருஷ்டி டாங்கே.. – கன்னக்குழியழகியின் நிலைமை இப்படி ஆனதே என்று பரிதாபம்தான் வருகிறது..

ஸ்ரீகாந்தின் நண்பர்களாக பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகியோர்உண்டு..

போலீஸ் இன்ஸ்பெக்டராக ஜான் விஜய் வழக்கம்போல ஓவர் ஆக்டிங்..

நாயகியின் அம்சமான அம்மாவாக திவ்யா, போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக கட்டுக்கோப்பான உடல் கட்டுடன் தேவி பிரியா ஆகியோர் அளவான நடிப்பில் கவர்கின்றனர்..

டெக்னிசியன்ஸ்….

தாஜ்நூர் இசையில்… காற்றில் ஆடும் சிறகு… கன்ன குழி அழகு.. என்ற பாடலும் வரிகளும் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசை கதையுடன் ஒன்றிணைந்து இருக்கிறது..

ஒளிப்பதிவாளர் கோகுல்.. : ஊட்டியின் அழகை முடிந்தவரை கேமராவில் பதிவு செய்திருக்கிறார்..

எஸ்.மணிபாரதி – இயக்கியிருக்கிறார்… தி பெட் (கட்டில்) என தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும் ஓரிடத்தில் கூட ஆபாசம் இல்லை.. அதுபோல கதை முழுவதுமே விலைமாது களமாக இருந்தாலும் கவர்ச்சி துளி கூட இல்லை..

இந்தக் கதையை இன்னும் திரில்லராக பயணிக்க திரைக்கதையில் சில ட்விஸ்ட் சீன்களை இணைத்து இருக்கலாம்..

மதுவுடன் மாது இணைந்தால் பிரச்சனை தான்.. எந்தத் துறையாக இருந்தாலும் நண்பர்கள் மத்தியில் பெண் வந்தால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை சொல்லி இருக்கிறார்..

அதே சமயத்தில் ஐடி துறையில் பணிபுரியும் நபர்கள் அடிக்கடி வீக் என்ட் பார்ட்டிகள் வைப்பது வழக்கம்.. அந்த வீக்கண்ட் பார்ட்டிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை என பெட் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் மணி பாரதி..

The Bed movie review