ரெட்ட தல விமர்சனம் 3.5/5.. அர்ப்பணிப்பான அருண்விஜய்-யின் ஆக்சன் அவதார்

ரெட்ட தல விமர்சனம் 3.5/5.. அர்ப்பணிப்பான அருண்விஜய்-யின் ஆக்சன் அவதார்

 

ரெட்ட தல விமர்சனம் 3.5/5.. அர்ப்பணிப்பான அருண்விஜய்-யின் ஆக்சன் அவதார்

 

ஸ்டோரி…

‘தடம்’ படத்திற்குப் பிறகு அருண் விஜய் இரு வேடம் ஏற்று நடித்திருக்கும் படம் ‘ரெட்ட தல’

காளி & உபேந்திரா இருவரும் ஒரே தோற்றம் உடைய நபர்கள்… காளி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் இவர் பாண்டிச்சேரியில் வசிக்கிறார்.. இவருடைய காதலி சித்தி இதானி.. நாயகனை பிடித்திருந்தாலும் அவரின் காதலை ஏற்க மறுக்கிறார் நாயகி.. இருவரும் நடுத்தர வாழ்க்கை வாழ்கிறோம்.. தன்னை பொறுத்தவரை ஆண் என்றால் அலெக்சாண்டரைப் போல ஆள வேண்டும்.. பெண் என்றால் கிளியோபட்ராவை போல வாழ வேண்டும் என்ற தத்துவம் பேசுகிறார்..

உபேந்திரா கோவாவில் மிகப்பெரிய பணக்காரர்.. ஒரு சூழ்நிலையில் காளியை பாண்டிச்சேரியில் சந்திக்கிறார் உபேந்திரா.. இருவரும் ஒரே தோற்றத்தில் இருப்பதால் நெருக்கமாக பழக ஆரம்பிக்கின்றனர்.

இருவரையும் பற்றி அறிந்து கொள்ளும் சித்தி நீ உபேந்திராவை கொன்று விட்டால் அவன் இடத்தில் நீ இருந்தால் நாம் இருவரும் சந்தோஷமாக இருக்கலாம் என்று திட்டம் போடுகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது உபேந்திராவை காலி செய்தாரா காளி.? காதலியை கரம் பிடித்தாரா.? இவர்களின் திட்டம் என்ன ஆனது என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

தமிழ் சினிமாவில் அர்ப்பணிப்பு மிக்க நடிகர்களில் ஒருவர் அருண் விஜய்.. அந்த அர்ப்பணிப்பை ஒவ்வொரு ஃப்ரேமிலும் வெளிப்படுத்தி இருக்கிறார்.. காதலி நிராகரிக்கும் போது உடைந்து போவதாகட்டும்.. வில்லன் கும்பல் மிரட்டி அடித்து நொறுக்கும்போது எமோஷனில் கலக்கி இருக்கிறார்..

கண்ணக் குழியழகி சித்தி இதானி.. மாடர்ன் உடையில் மயக்குகிறார்.. காதலை விட பணத்தாசை பிடித்த சில பெண்களை நினைவுப்படுத்துகிறார்..

இரண்டு அருண் விஜய் மோதிக் கொள்ளும் காட்சி அனல் பறக்கிறது..

பாலாஜி முருகதாஸ் & தான்யா ரவிச்சந்திரன் ஆகியோரின் கேரக்டர் வீணடிக்கப்பட்டிருக்கிறது..

வில்லனாக மிரட்டுவார் ஜான்விஜய் என்று பார்த்தால் ஓவராக பேசி ஓவர் ஆக்டிங் கொடுத்து இருக்கிறார்.. ஹரிஸ் பெராடி வழக்கமாக சைலண்டாக பேசி வயலெண்ட் வில்லனாக மாறியிருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.. தனுஷ் பாடிய ‘கண்ணம்மா..’ பாடல் நல்ல ரொமான்டிக்.. அந்த பாடல் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.. காட்சிகள் கலர்ஃபுல்..

டிஜு டோமி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் பெரும்பாலும் காட்சிகளை இரவில் படமாக்கி இருக்கிறார்.. அதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாமே..

ஆடை வடிவமைப்பை கிருத்திகா மேற்கொண்டு இருக்கிறார்.. ஹீரோ வில்லன் ஹீரோயின் அனைவருக்கும் ரசிக்கும்படியான காஸ்ட்யூம் கொடுத்து இருப்பது சிறப்பு.

அந்தோணி எடிட்டிங் செய்திருக்கிறார்.. இடைவேளைக்குப் பிறகு சில காட்சிகளை ட்ரிம் செய்திருக்கலாம்..

பிசி சண்டை பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.. ஆக்ஷன் அனைத்தும் அசத்தல்..

மான் கராத்தே மற்றும் கெத்து ஆகிய படங்களை இயக்கிய கிரீஸ் திருக்குமரன் இந்த ரெட்ட தல படத்தை இயக்கியிருக்கிறார்.. ரெட்ட தல-யில் ஒருவர் பரோலில் வந்த குற்றவாளி என்று தெரியும்போது திரைக்கதையில் சூடு பறக்கிறது.. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பை திரைக்கதையில் அமைத்திருக்கிறார் கிரிஷ்..

இடைவேளை வரை விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில் கொஞ்சம் சோர்வை தருகிறது.. கிளைமாக்ஸ் காட்சியில் ஹாலிவுட் தரத்தில் மேக்கிங் இருந்தாலும் குழப்பத்தை ஏற்படுத்தும்..

அருண் விஜய் 2 முறை துப்பாக்கி குண்டு பட்டும் இறக்காமல் சண்டை போடுவது கொஞ்சம் நம்புபடியாக இல்லை.. ( ஆனால் நிஜ வாழ்க்கையில் எம் ஜி ஆர் குண்டடிப்பட்டும் பல வருடங்கள் வாழவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.)

இடைவேளைக்கு முன்பு காதல் கதையாகவும் இடைவேளைக்குப் பிறகு கேங்ஸ்டர் கதையாகவும் ரெட்ட தல உருமாறி இருக்கிறது.. இரண்டு கேரக்டருக்கும் தன் தோற்றத்திலும் உடல் மொழியிலும் வித்தியாசம் கொடுத்திருப்பது அருண் விஜய்யின் அர்ப்பணிப்பை காட்டுகிறது..

 

Arun Vijays Retta Thala review