‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜுக்கு பாராட்டு விழா..; ரஜினி – கமல் பங்கேற்பு..!
‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜுக்கு பாராட்டு விழா..; ரஜினி – கமல் பங்கேற்பு..!
இந்திய சினிமாவில் பல புகழ்பெற்ற இயக்குனர்கள் இருந்தாலும் திரைக்கதை மன்னன் என்று இந்திய சினிமா ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் கே பாக்யராஜ்..
கோவையிலிருந்து சென்னை வந்த பாக்யராஜ் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.. ஒரு கட்டத்தில் இவரே ஹீரோவாகவும் உருவெடுத்தார்.. அதன் பின்னர் பல படங்களை இயக்கி இவரே கதை நாயகனாக நடித்தார்..
இவரிடம் பணியாற்றிய பல உதவி இயக்குனர்கள் பாண்டியராஜ் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் இன்று மிகப்பெரிய நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்.

சின்ன வீடு, முந்தானை முடிச்சு, வீட்ல விசேஷங்க, இது நம்ம ஆளு, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்..
இவருடைய படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் சமாச்சாரங்கள் இருந்தாலும் அதை மேலோட்டமாக குடும்பத்தினர் ரசிக்கும் படி சொல்வதுதான் இவரது தனி ஸ்டைல்..
பாலகுமாரன் இயக்கிய இது நம்ம ஆளு படத்திற்கு பாக்யராஜ் தான் இசை அமைத்திருந்தார்.. இவரது முருங்கைக்காய் காமெடி இன்றளவிலும் தமிழக மக்களால் ரசிக்கப்பட்டு பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.. இவருக்கு வயது தற்போது 72.
இந்த நிலையில் இவர் திரை உலகிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார். இதனை முன்னிட்டு வருகிற 2026 ஜனவரி 7ஆம் தேதி இவருக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடைபெற உள்ளது..
இதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பாக்யராஜுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்..
ரஜினிகாந்த்தும் பாக்யராஜும் ‘நான் சிகப்பு மனிதன்’ மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் நடிகர் கமல்ஹாசனும் இந்த விழாவில் பங்கேற்க வாய்ப்பிருக்கலாம் என கூறப்படுகிறது.. பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த கைதியின் டைரி படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பாக்யராஜ்..
—-
மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா 2026 ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ளது.. இந்த விழாவிலும் ரஜினி & கமல் இருவரும் இணைந்து பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன..
Bhakyaraj 50 years event Rajini and Kamal will participate

