டிசம்பர் 12 முதல் ‘லாக் டவுன்’ வருது..; அனுபமா – நிரோஷா – மஹானா வர்றாங்க.!

டிசம்பர் 12 முதல் ‘லாக் டவுன்’ வருது..; அனுபமா – நிரோஷா – மஹானா வர்றாங்க.!

 

டிசம்பர் 12 முதல் ‘லாக் டவுன்’ வருது..; அனுபமா – நிரோஷா – மஹானா வர்றாங்க.!

 

‘லாக் டவுன்’ என்ற வார்த்தையே நம்மில் பலருக்கு கொரோனா காலத்தில் தான் தெரிந்திருக்கும்.. அந்த காலகட்டங்களில் வெளியே எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்த ஒவ்வொருவருக்கும் அந்த தருணங்கள் மறக்க முடியாது.

வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் படிக்கலாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆபிஸ் வேலை செய்யலாம் என்ற திட்டங்கள் அப்போதுதான் அறிமுகமானது..

இந்த நிலையில் லாக் டவுன் சமயத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து ஒரு திரைப்படம் லாக்டவுன் என்ற பெயரிலே உருவாகி உள்ளது..

லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

இந்த படத்தை ஏஆர் ஜீவா இயக்க சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, ‘லொள்ளு சபா’ மாறன், மஹானா சஞ்சீவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன..

இந்த வாரம் டிசம்பர் 5ஆம் தேதி லாக்டவுன் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் தமிழகம் என்றும் மழை இருப்பதால் தள்ளி வைக்கப்பட்டது..

இந்த நிலையில் அடுத்த வாரம் டிசம்பர் 12ஆம் தேதி லாக்டவுன் திரைப்படம் வெளியாகும் என லைக்கா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Lockdown set to Release from 12th December 2025