2026 புத்தாண்டில் ‘தளிர்’ சிங்கிள்..; மோகனைத் தொடர்ந்து சுரேஷுக்கும் ரீ-என்ட்ரி கொடுக்கும் விஜய் ஸ்ரீ..!
2026 புத்தாண்டில் ‘தளிர்’ சிங்கிள்..; மோகனைத் தொடர்ந்து சுரேஷுக்கும் ரீ-என்ட்ரி கொடுக்கும் விஜய் ஸ்ரீ..!
வித்தியாசமான சிந்தனையில் படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு தொடர்ந்து கொடுத்து வருபவர் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.
87 வயது நிறைந்த சாருஹாசனை நாயகனாக வைத்து ‘தாதா 87’ என்ற படத்தை கொடுத்த போது யார் இவர்.? என்று கோலிவுட் திரும்பி பார்த்தது..
இதனை எடுத்து பிஆர்ஓ நிகில் முருகனை கதை நாயகனாக்கி ‘பவுடர்’ படத்தை கொடுத்தார்..

இதன் பின்னர் 1980 களில் வெள்ளிவிழா நாயகனாக அழைக்கப்பட்ட மைக் மோகனுக்கு ‘ஹரா’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.. இதனையடுத்து விஜய்யுடன் ‘கோட்’ படத்தில் வில்லனாக நடித்தார் மோகன்..
தற்போது பன்னீர் புஷ்பங்கள் சுரேஷுக்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார் விஜய் ஸ்ரீ.. இவர் இயக்கத்தில் உருவாகி வரும் தளிர் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சுரேஷ்..

இவருடன் அனித்ரா, தீபா ஷங்கர், சிங்கம்புலி, மொட்ட ராஜேந்திரன், வையாபுரி, குழந்தை நட்சத்திரம் மாயா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது..
இந்த நிலையில் 2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தளிர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார் விஜய் ஸ்ரீ.
இந்த படம் 2026 கோடைக்காலத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்..
Suresh Re-entry Vijay Sri directorial Thalir first Single update

