மீண்டும் சிலம்ப(அ)ரசன் &  விஜய்சேதுபதி கூட்டணியை இணைத்தார் வெற்றிமாறன்.!

மீண்டும் சிலம்ப(அ)ரசன் &  விஜய்சேதுபதி கூட்டணியை இணைத்தார் வெற்றிமாறன்.!

மீண்டும் சிலம்ப(அ)ரசன் &  விஜய்சேதுபதி கூட்டணியை இணைத்தார் வெற்றிமாறன்.!

 

முதன்முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறார் சிலம்பரசன்.. இந்த படத்திற்கு ‘அரசன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. இந்த படம் முழுக்க முழுக்க வட சென்னை பற்றிய கதையாக இருக்கும் என தெரிகிறது.

இந்த படத்தில் இயக்குனர் நெல்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நெல்சன் சிம்பு இணைந்த ஒரு பிரமோ வீடியோ வெளியானது..

அதில் இயக்குனர் நெல்சனை பார்த்து.. ‘என்னுடைய கேரக்டரில் தனுஷ் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சிம்பு பேசும் ஒரு வசனமும் இடம் பெற்று இருந்தது..

அப்போது முதலே ரசிகர்களுக்கு இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது..

இந்த நிலையில் இந்த படத்தில் இணைந்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.. இதற்கான அறிவிப்பு இன்று நவம்பர் 25 வெளியானது.

ஏற்கனவே சிம்பு  & விஜய் சேதுபதியும் இணைந்து மணிரத்தனம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் என்ற படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

அதுமட்டுமில்லாமல் வெற்றி மாறன் இயக்கிய விடுதலை படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

கலைப்புலி எஸ் தானு இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்..

 

Vijay Sethupathi joins with Simbu and Vettrimaran for Arasan