பொங்கல் ரேசில் அஜித் படம் விலகியதால் ரிலீசுக்கு குவிந்த 10 படங்கள் லிஸ்ட்

பொங்கல் ரேசில் அஜித் படம் விலகியதால் ரிலீசுக்கு குவிந்த 10 படங்கள் லிஸ்ட்
2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ மற்றும் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ மற்றும் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் திடீரென 2024 டிசம்பர் 31ஆம் தேதி அஜித் ரசிகர்களுக்கு பேரிடியாக ‘விடாமுயற்சி’ படம் வெளியாகாது என லைக்கா நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் புத்தாண்டை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்பது தெரிய வந்தது.
‘விடாமுயற்சி’ படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகிக் கொண்டதால் அதிரடியாக மற்ற பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களின் அறிவிப்பை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர்.
அதன்படி கிட்டத்தட்ட ஒரு படம் விலகிய நிலையில் 8 படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரங்கள் இதோ
2025 பொங்கல் ரிலீஸ்*
#வணங்கான் – பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.. ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது..
#கேம் சேஞ்சர் – சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள இந்த படத்திற்கு தமிழ் இசை அமைத்துள்ளார்.. ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது..
#காதலிக்க நேரமில்லை – கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்துள்ள இந்த படத்திற்கு ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.. இந்த படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது..
#மெட்ராஸ்காரன் – கலையரசன் நடித்துள்ள இந்த படம் ஜனவரி 10-ல் வெளியாகிறது..
#தருணம் – தேஜாவு பட இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.. ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது..
#படை தலைவன் – மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் இது..
#2k லவ் ஸ்டோரி – சுசிந்திரன் இயக்கத்தில் புதுமுக நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்..
#டென் ஹவர்ஸ் – சிபிராஜ் நடித்துள்ள படம் இது. ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது..
MGR – மத கஜ ராஜா – சுந்தர் சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, சந்தானம், வரலட்சுமி ஆகியோர் நடிக்க விஜய் ஆண்டோனி இசை அமைத்துள்ளார்.. இந்த படம் மட்டும் ஜனவரி 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரிலீஸ் ஆகிறது..
விஷ்ணு வரதன் இயக்கத்தில் யுவன் இசையில் ஆகாஷ் முரளி & அதிதி ஷங்கர் இணைந்துள்ள ‘நேசிப்பாயா’ படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது..
2025 Pongal movies release news updates