One Month – One Celebration – One Thalaivar..; சூப்பர் ஸ்டாருக்காக லாரன்ஸ் சூப்பர் பிளான்

One Month – One Celebration – One Thalaivar..; சூப்பர் ஸ்டாருக்காக லாரன்ஸ் சூப்பர் பிளான்

 

 

One Month – One Celebration – One Thalaivar..; சூப்பர் ஸ்டாருக்காக லாரன்ஸ் சூப்பர் பிளான்

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 76-வது பிறந்தநாள் 2026 டிசம்பர் 12 அன்று கொண்டாடப்பட உள்ளது… அவரது பிறந்த நாளை உலகம் எங்கும் உள்ள ரசிகர்கள் கொண்டாட எப்போதும் தயார் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகரும் இயக்குனரும் ரஜினியின் தீவிர பக்தருமான ராகவா லாரன்ஸ் நவம்பர் 12 முதல் டிசம்பர் 12 வரை ஒரு மாதத்திற்கு கொண்டாட வேண்டும் என விரும்பி அதன் படி பல முன்னெடுப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்..

தனது எக்ஸ் வலைதளப் பதிவில் லாரன்ஸ் தெரிவித்திருப்பதாவது, “நவம்பர் 12 முதல் டிசம்பர் 12 வரை – ஒரு மாதம் நீடிக்கும் ‘தலைவர்’ பிறந்தநாள் கொண்டாட்டங்கள்! ஒரு மாதம். ஒரு கொண்டாட்டம். ஒரே தலைவர்! தலைவரின் தீவிர ரசிகனாக, அவர் தனது 75-வது வயதில் ஒரு JAILER2 பிரம்மாண்டமான வெற்றிப் படத்தைக் (Industry Hit) கொடுத்ததைக் கண்டு நான் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்..

அவரது 76-வது பிறந்தநாளையும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியையும், நவம்பர் 12 முதல் டிசம்பர் 12 வரை ஒரு மாதம் முழுவதும் கொண்டாட விரும்புகிறேன்..

தலைவரையே நேரில் அழைத்து, அவர் முன்னிலையில் இந்தச் சிறப்பான தருணத்தைக் கொண்டாட வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால், அவரது எளிமையான மற்றும் அடக்கமான குணத்தை நான் நன்கு அறிவேன்..

அவர் தனக்காகப் பெரிய கொண்டாட்டங்களை விரும்புபவர் அல்ல. அதனால்தான், இந்த ஒப்பற்ற சூப்பர் ஸ்டார் மீதுள்ள அளவற்ற அன்பின் மற்றும் மரியாதையின் காரணமாக, நாமெல்லாம் – அவரது ரசிகர்கள் – நம்முடைய சொந்த பாணியில் அவரைக் கொண்டாடுகிறோம்..

சிறுவயது முதலே நான் போற்றி வரும் தலைவரின் மீதுள்ள அன்பினால் மட்டுமே உருவானது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர்தான் எனக்கு வாழ்வளித்தார்; இன்று திரையுலகில் நான் அடைந்துள்ள அனைத்துமே அவருக்குத்தான் சேரும். தலைவரைப் போல இன்னொரு நட்சத்திரம் இனி வரப்போவதில்லை. அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது…

 

அவரது வாழ்வையும் பிறந்தநாளையும் மிகச் சிறந்த முறையில் கொண்டாட வேண்டும். பல தலைமுறை ரசிகர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகளையும் மகிழ்ச்சியையும் வழங்கிய அந்த மனிதரை, நாங்கள் இப்படித்தான் கொண்டாடுகிறோம்..”

என தெரிவித்துள்ளார் அதன்படி நவம்பர் 12 முதல் எஸ் ஜே சூர்யா பார்த்திபன் உள்ளிட்ட பலரும் ரஜினியின் பல நினைவுகளை பகிர்ந்து வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்..

 

Raghava Lawrence wish to Celebrate Rajini Birthday for one month

—